பிக் பாஸ் அல்டிமேட்டில் இறுதி சுற்றுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய போட்டியாளர் ஒருவர், இரவோடு இரவாக நிகழ்ச்சியில் இருந்து எவிக் செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு ஓடிடியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த வார இறுதியிl ஃபைனல்ஸ் நடைப்பெறவுள்ளது. இப்படி இருக்கையில், இறுதி வாரத்தில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து ஜூலி எவிக்ட் ஆகியுள்ளார் என தகவல் பரவியுள்ளது. இன்று வெளியாகிய புரமோவிலும் ஜூலியை பார்க்க முடியவில்லை. இதனால் ஜூலி வெளியானது உண்மை தான் என ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரம் அவரின் ரசிகர்கள் "இதை ஏற்றுக் கொள்ள முடியாது, ஜூலி கண்டிப்பாக இறுதி மேடையில் நிற்க தகுதியானவர்" என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க.. வெண்பா - யாழினி பற்றிய உண்மை தெரிய வரும் நேரம்.. சித்தி 2 வில் ட்விஸ்ட்!
பிக் பாஸ் முதல் சீசனில் ஜூலி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து இருந்தார். குறிப்பாக ஓவியாவுடன் சண்டை தொடங்கி ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து இருந்தார். இதன் தாக்கம், அவர் வெளியில் வந்த பிறகு அவரை பின் தொடர்ந்தது. ஆனால் இதையெல்லாம் மாற்ற பிக் பாஸ் குழு அவருக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியது. பிக் பாஸ் அல்டிமேட்டில் ஜூலி என் ட்ரி கொடுத்தார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட்டில் ஜூலியும் இருந்தார்.
சஹானாவுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!
2வது வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டவர் டாஸ்குகளில் முழு உழைப்பை கொட்டினார். தன்னுடைய உண்மையான முகத்தை ரசிகர்களுக்கு காட்டினார். இந்த ஜூலியை ரசிகர்களுக்கு பிடித்து போக, ஒவ்வொரு வார எவிக்ஷனிலும் ஜூலியை மக்கள் ஓட்டு போட்டு காப்பாற்றினர். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்டில் இறுதி போட்டிக்கு நிரூப், தாமரை செல்வி, அபிராமி, ஜூலி, ரம்யா பாண்டியன், பாலாஜி என 6 போட்டியாளர்களும் சென்று விட்டனர் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க பிக் பாஸ் குழு ட்விஸ்ட் வைத்தது.
நேற்று முன் தினம், இரவோடு இரவாக அபிராமி வீட்டில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து தற்போது ஜூலியும் எலிமினேஷன் ஆகி இருப்பதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ரசிகர்களும் ஜூலியின் எலிமினேஷன் சரியில்லை என இணையத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.