ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அந்த நடிகருடன் பிக் பாஸ் ராஜூ...ரசிகர்கள் சொன்ன விஷயம் இதுதான்!

அந்த நடிகருடன் பிக் பாஸ் ராஜூ...ரசிகர்கள் சொன்ன விஷயம் இதுதான்!

பிக் பாஸ் ராஜூ

பிக் பாஸ் ராஜூ

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் நிகழ்ச்சியில் ராஜூ கலந்துக் கொண்டார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ, நடிகர் சிம்புடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். அதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் கமெண்டுகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பிக் பாஸ் சீசன் 5ல் தன்னுடைய திறமையால் டைட்டில் வின்னரானவர் ராஜூ ஜெயமோகன். தன்னுள் பல திறமைகளை வைத்து கொண்டு எப்போதுமே சிந்தனையுடனே ஸ்கிரிப்ட் ரைட்டராக வலம  வருவார். ராஜூ ஜெயமோகனுக்கு பிக் பாஸூக்கு பிறகு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்த பீக்கை பயன்படுத்தி அடுத்தக்கட்டத்திற்கு நகர முடிவு செய்திருக்கும் ராஜூ, சீரியலுக்கு வராமல் வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். பாரதி கண்ணம்மாவில் வருணாக, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தியாக இவரின் என்ட்ரிக்கு ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால் இந்நாள் வரை அதைப்பற்றி மூச்சு பேச்சே விடமாட்டுகிறார் ராஜூ.

  Bank Holidays April: வங்கிகளுக்கு இந்த வாரத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை! என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும் தெரியுமா?

  அதே நேரம்  சீரியலில் நடித்தாலும் தன்னுடைய ஸ்கிரிப் ரைட்டிங் மீது கவனத்தை தவறவிடாத ராஜூ தொடர்ந்து அதை செய்வார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல ஷோக்களின் ஸ்கிரிப் ரைட்டர் ராஜூ தான். சூப்பர் சிங்கர் பிரியங்காவின்முதல் நிகழ்ச்சியின் ஸ்கிரிப் ரைட்டரும் ராஜூ மோகன் தான். இதை பிரியங்காவே பிக் பாஸ் வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.இப்படி பல திறமை சொந்தக்காரர் ஆன ராஜூ, தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கும் ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகரும், பிக் பாஸ் அல்டிமேட் தொகுப்பாளருமான சிம்புடன் ராஜூ எடுத்துக் கொண்ட புகைப்படம் தான்  அது.

  சொந்த வீடு கட்ட லோன் வாங்குவது இவ்வளவு ஈஸியா? ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்!

  நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் நிகழ்ச்சியில் ராஜூ கலந்துக் கொண்டார். அப்போது பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர் பற்றி தன்னுடைய ஸ்டைலில் கலாய்த்து கைத்தட்டல்களையும் அள்ளி இருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சியில் ராஜூ, சிம்புடன் புகைப்படம் ஒன்றை எடுத்து இருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாவில் ”நேரில் சிம்பு சார் பயங்கர அழகாக இருந்தார்” என குறிப்பிட்டு இருக்கிறார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Raju Jeyamohan (@raju_jeyamohan)  அதற்கு ராஜூவின் ரசிகர்கள், “சிம்புவை விட நீங்கள் தான் அழகு ராஜூ” என ஆச்சரியம் தரும் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு ராஜூவுக்கு மிகப் பெரிய ஃபேன்ஸ் கூட்டம் இணையத்தில் இருப்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது .ஆனால் ரசிகர்கள் சொன்ன இந்த கமெண்டை ராஜூவே மறுத்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv