ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரியங்காவுக்கு கண்ணீருடன் நன்றி சொன்ன தாமரை.. இதற்கு அவர் தான் காரணமாம்!

பிரியங்காவுக்கு கண்ணீருடன் நன்றி சொன்ன தாமரை.. இதற்கு அவர் தான் காரணமாம்!

பிக் பாஸ் தாமரை

பிக் பாஸ் தாமரை

பிக்பாஸ் அல்டிமேட்டின் கிராண்ட் ஃபினாலேவில் பிக்பாஸின் ஆஸ்தான தொகுப்பாளரான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு கண்ணீருடன் தாமரை செல்வி நன்றி கூறுகிறார். இந்த புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரம் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. முதலில் 6 வாரம் மட்டுமே ஒளிபரப்பு என்று தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட், பின்னர் 7 வாரம் என்று மாறியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 10 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது 10 வது வார இறுதியில் இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட்டின் ஃபினாலேவுக்காக ஒட்டு மொத்த ரசிகர்கள் பட்டாளமும் வெயிட்டிங். ஏப்ரல் 10 அன்று ஓடிடியில் ஃபைனல்ஸ் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.

  சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டிவி செய்த காரியம்..இது நியாயமே இல்லை என சண்டை போடும் ரசிகர்கள்!

  தற்போது, பாலாஜி முருகதாஸ், தாமரை செல்வி, நிரூப் நந்தகுமார், ரம்யா பாண்டியன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். கடைசி 2 நாளில் அபிராமி மற்றும் ஜூலி எவிக்ட் ஆகினர். இதற்கு முன்பு சுருதி பெரியசாமி 15 லட்ச ரூபாய் பணப் பெட்டியுடன் வெளியேறினார். இவர்களில், ரம்யா பாண்டியன் மட்டுமே வைல்டு கார்டு போட்டியாளர் எனப்தும் குறிப்பிடத்தக்கது. தற்போது காலில் ஃபிராக்சர் ஆகி வீல் சேரில் தான் பிக் பாஸ் வீட்டில் சுற்றி வருகிறார் ரம்யா.

  இப்படி இருக்கையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன. சிறப்பு விருந்தினர்களாக, இறுதி கட்டத்தில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த நல்ல நண்பர்களாக முன்னாள் பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். தாடி பாலாஜி, அனிதா, ஷாரிக், அபிநய், சுருதி, சுரேஷ் தாத்தா என அனைவாரும் உள்ளே வந்துள்ளனர். அதுமட்டுமில்லை, ஸ்பெஷல் சர்ப்பிரைஸாக பிக் பாஸ் 5 போட்டியாளர்கள் பிரியங்கா மற்றும் பாவ்னி நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டுக்கு மீண்டும் டீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

  விருது பெறாத காற்றுக்கென்ன வேலி சீரியல் செய்த சாதனை! கொண்டாடும் ரசிகர்கள் கூட்டம்

  இப்படி இருக்கையில் இன்றைய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகான புரமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் அல்டிமேட்டின் பயணங்கள் குறித்து போட்டியாளர்களை பிக் பாஸ் பேச சொல்கிறார். இந்த டாஸ்கில் நிரூப், அனிதா பற்றி பேசுகிறார். அதுமட்டுமில்லை நிரூப், பிக் பாஸ் 5 பிரியங்கா மாதிரி அல்டிமேட்டில் அனிதா எனவும் குறிப்பிட்டு சொல்கிறார். அதே போல்,தாமரை நான் இந்த நிலைக்கு வந்ததே பிரியங்காவால தான், வெளியில் போன பிறகு, என் கணவர் தான் இதை எனக்கு சொன்னார், ரொம்ப நன்றி என கூறி கண்ணீருடன் தாமரையை கட்டி பிடிக்கிறார்.

  ' isDesktop="true" id="728449" youtubeid="JjavP9SEuBE" category="television">

  இந்த புரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட்டின் கிராண்ட் ஃபினாலேவில் பிக்பாஸின் ஆஸ்தான தொகுப்பாளரான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி கமல்ஹாசன் இறுதிப் போட்டிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்பது ரசிகர்களின் ஏகோபித்த குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv