பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு இரங்கல்..

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு இரங்கல்..
பிக்பாஸ்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 11:53 AM IST
  • Share this:
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74)  வெள்ளிக்கிழமை காலமானார்.

இதயம், மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவு திரைத்துறையினர் உட்பட நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது.

குடியரசுத் தலைவர், இந்திய பிரதமர் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பி.யின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பி.மறைந்து இரண்டு நாட்களான பின்னரும் சமூகவலைதளங்களில் அவரைப் பற்றிய பேச்சுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.


இந்நிலையில் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் தொகுப்பாளரும் நடிகருமான நாகர்ஜூனா நிகழ்ச்சி நேற்றைய நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதற்கான வீடியோவையும் அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அக்டோபர் 4-ஆம் தேதி முதல் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தி கமல்ஹாசன் தனது நிகழ்ச்சியை தொடங்குவார் என்றே தெரிகிறது.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading