Home /News /entertainment /

விஜய் டிவியில் மீண்டும் பிக் பாஸ் ராஜூ.. அந்த சீரியலில் திரும்பவும் வர போகிறாரா?

விஜய் டிவியில் மீண்டும் பிக் பாஸ் ராஜூ.. அந்த சீரியலில் திரும்பவும் வர போகிறாரா?

பிக் பாஸ் ராஜூ

பிக் பாஸ் ராஜூ

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு சில தினங்கள் கழித்து ராஜூ, இனி சீரியலில் நடிக்க போவதில்லை படங்களில் கவனம் செலுத்த இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

  விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன், கூடிய விரைவில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க போவதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் கத்தியின் வருகைக்காக மரண வெயிட்டி என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் ஆகும். இந்த சீரியலின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், கொரோனா லாக்டவுன் காரணத்தினால் முதல் பாகம் பாதியிலே நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து  நாம் இருவர் நமக்கு இருவர் 2 ஒளிப்பரப்பாகி வருகிறது. மாயன் ரோலில் மிர்ச்சி சரவணன் நடிக்க, அவருக்கு ஜோடியாக சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா நடித்து வந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் சில மாதங்களுக்கு முன்பு அவர் சீரியலில் இருந்து விலகினார். தற்போது அரண்மனை கிளி ஜானு மகாலட்சுமி ரோலில் நடித்து வருகிறார்.

  இதையும் படிங்க.. எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம்.. அபி டெய்லர் சீரியல் ரேஷ்மா சொன்ன விஷயம்!

  டி.ஆர்.பியை பொறுத்தவரையில் சீரியல் நல்ல ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் மாயனுக்கு பிறகு மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் கத்தி என்கிற கதிரேசன் ரோல் தான். இதில் கத்தியாக பிக் பாஸ் புகழ் ராஜூ நடித்து வந்தார். இந்த சீரியல் மூலம் ராஜூவுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் கிடைத்தனர். கத்தி - காயத்ரி கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கிரீனில் ஒர்க்கவுட் ஆக ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகமானது. இந்த நேரத்தில் தான் ராஜூவுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க அவர் சீரியலில் இருந்து நிகழ்ச்சிக்கு கிளம்பினார்.

  இதையும் படிங்க.. பாக்கியாவிடம் உண்மையை சொல்லும் கோபி அப்பா.. பாக்கியலட்சுமியில் அடுத்த ட்விஸ்ட்!

  பிக் பாஸிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர் டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார். பிக் பாஸ் ஷோ முடிந்த பின்பு ராஜூ சீரியலில் எப்போது என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். கத்தியாக வேறு ஒரு நடிகரை காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கதிரேசன், மாறன் பேச்சை கேட்டு துபாய்க்கு செல்வது போல் கதையோட்டம் பயணிக்க தொடங்கியது ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு சில தினங்கள் கழித்து ராஜூ, இனி சீரியலில் நடிக்க போவதில்லை படங்களில் கவனம் செலுத்த இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனால் கத்தி ரசிகர்கள் சோகமடைந்தனர். இனிமேல் கத்தி ரோலில் வேற ஒருவரை காட்டலாம் எனவும் யூகித்து இருந்தனர். ஆனால் இப்போது வரை யாரையும் கத்தி ரோலில் காட்டவில்லை.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  அதே நேரம், ராஜூவும் படத்தில் கமிட் ஆன மாதிரி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் ராஜூ மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரீ.என் ட்ரி கொடுக்க இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. கத்தி மட்டுமில்லை இறந்ததாக காட்டப்பட்ட முத்துராசும் சீரியலில் இனி வரவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐஸ்வர்யா திருமண பேச்சுகள் சீரியலில் முக்கிய கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.  இந்த நேரத்தில் தான் முத்துராசு மீண்டும் வந்து ஐஸ்வர்யாவை மிரட்டுவது போல காட்சிகள் வரவுள்ளதாக இணையத்தில் உறுதி செய்யப்படாத தகவல்கள் உலா வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி