Home /News /entertainment /

கடைசி வரை இருந்த தாமரை செல்வி.. பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த முறை வாங்கிய சம்பளம் இதுதான்!

கடைசி வரை இருந்த தாமரை செல்வி.. பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த முறை வாங்கிய சம்பளம் இதுதான்!

பிக் பாஸ் தாமரை செல்வி

பிக் பாஸ் தாமரை செல்வி

பிக்பாஸ் அல்ட்டிமேட் முடிந்த கையேடு தாமரை செல்வி, தனது மாமியாரை நேரில் சென்று பார்த்து ஆசீர்வாதம் பெற்று கொண்டுள்ளார்.

  டிவி சேனல்களில் ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்க்கும் இரு வகை நிகழ்ச்சிகள் உள்ளன. ஒன்று சீரியல்கள் மற்றொன்று ரியாலிட்டி ஷோக்கள். சீரியல்களுக்கென்று ஒருபக்கம் ரசிகர் கூட்டம் இருந்தாலும் கூட, ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மனதில் தனி இடம் பிடித்து உள்ளன.

  தமிழ் டிவி சேனல்களிடையே மிகவும் பிரபலமான மற்றும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவாக இருப்பது ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தான். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ்.

  மக்களின் அபிமானம் பெற்ற முன்னணி தமிழ் சேனலாக இருக்கும் ஸ்டார் விஜய் டிவி-யில் பிக்பாஸின் 5 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி இருக்கிறது. 5 சீசன்களையும் உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி ஷோவிற்கு கூடுதல் சுவாரசியம் தந்தார். ரசிகர்களின் ஆதரவை தக்க வைக்க OTT வெர்ஷன் பிக்பாஸ் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டது.

  Axis Bank : இனிமேல் மினிமம் பேலன்ஸ் ரூ.12,000.. ஷாக்கில் வாடிக்கையாளர்கள்!

  பிக்பாஸ் அல்ட்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், வெற்றிகரமாக டெலிகாஸ்ட்டாகி நிறைவடைந்து உள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24*7 லைவ் ஸ்ட்ரீமிங்கில் தற்போது ஒளிபரப்பாகிய பிக்பாஸ் அல்ட்டிமேட், வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி பெரியசாமி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 14 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்ட்டிமேட் துவங்கியது.

  ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்!

  பின்னர் வைல்டு கார்டு என்ட்ரியாக ரம்யா பாண்டியன், சதீஷ் நுழைந்தனர். கமல்ஹாசன் திரைப்பட வேலைகள் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து விலக, நடிகர் சிம்பு தொகுப்பாளர் ஆனார். இறுதியாக பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1-ன் வின்னர் ஆனார். சீசன் 5-ல் கோட்டை விட்ட தாமரை செல்வி வெல்ல வாய்ப்பு இருக்கும் என்று ஏதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி வரை போராடிய தாமரை மூன்றாவது ரன்னர்-அப் ஆனார்.   
  View this post on Instagram

   

  A post shared by thamizhachi (@thamizhachi.official)


  இந்நிலையில் பிக்பாஸ் அல்ட்டிமேட் முடிந்த கையேடு தாமரை செல்வி, தனது மாமியாரை நேரில் சென்று பார்த்து ஆசீர்வாதம் பெற்று கொண்டுள்ளார். அல்ட்டிமேட் ஷோவில் பங்கேற்ற பிறகு தனது மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினரை தாமரை செல்வி சந்தித்துள்ள போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

  கலை மற்றும் குடும்பத்தை மட்டுமே தெரிந்த மற்றும் நேசிக்கும் எங்கள் தாமரை என ரசிகர்கள் வைரல் போட்டோக்களுக்கு கீழ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதனிடையே மூன்றாவது ரன்னர்-அப்பாக வந்த தாமரை செல்வி, பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் பங்கேற்க வாரத்திற்கு ரூ.80 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி