பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தி என்ட்ரி?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தி என்ட்ரி?
சுரேஷ் சக்ரவர்த்தி
  • Share this:
அக்டோபர் 4-ம் தேதி முதல் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 4-வது சீசன் இன்றுடன் 50 நாட்களை எட்டியுள்ளது. இதில் தற்போது அனிதா, அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம், ரமேஷ், ஆரி, சனம், சம்யுக்தா, சுசித்ரா, பாலாஜி, ஷிவானி, கேப்ரில்லா, ரம்யா மற்றும் ஆஜித் ஆகிய 15 பேர் உள்ளனர்.

2-வது வாரத்தில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். 3-வது வாரத்தில் ஆஜித் தான் வைத்திருந்த எவிக்‌ஷன் பாஸை பயன்படுத்தி தப்பித்தார். 4-வது வாரத்தில் வேல்முருகனும், 5-வது வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும் வெளியேற்றப்பட்டனர்.

சுரேஷ் சக்ரவர்த்தி பற்றி பேசிய கமல், ஒவ்வொரு முடிவும் தொடக்கம் தான். சுரேஷை நான் வெளியில் அனுப்பவில்லை. நானாக அனுப்பினேன் என்று நம்பாதீர்கள். அவர் வெளியேறியதற்கான காரணம் உள்ளேயும் இருக்கலாம். சுரேஷாகவும் இருக்கலாம். என்னவென்று விவாதியுங்கள் என்று கமல் தனது பேச்சில் ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தார்.


அதேபோல் பிக்பாஸ் வீட்டில் தனது குசும்புத்தனமான நடவடிக்கைகளால் அதிக ரசிகர்களைப் பெற்றிருக்கும் சுரேஷ் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று பார்வையாளர்களும் கருதினர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சீசனில் வனிதா மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தது போல் இந்த முறை சுரேஷ் சக்ரவர்த்தியை அனுப்ப பிக்பாஸ் டீம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading