அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ரியோ ராஜ், சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி ,சோம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகிய 16 பேர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இதில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தான் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்ல முடிவெடுத்தேன் என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “பெத்த புள்ளய விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு. 7 வருஷமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன். 7 வருஷ செய்தி வாசிப்பு. எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல. நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு புடிச்ச வேலை.
உனக்கு அப்புறம் வந்த புது பெண்களெல்லாம், சீரியல், தொடர், அது இது என வளர்ந்துவிட்டார்கள். நீ ஏன் இன்னும் நியூஸையே படித்துக்கொண்டு வளராமல் இருக்கிறாய் என நிறைய பேர் கேட்பார்கள். திடீர் ட்ரெண்டிங்குக்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும் அதில் நிறையவே சம்பாதிக்கலாம் என்று தெரிந்தும் நான் எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அடுத்து எடுத்து வைக்கிற அடி நல்ல வாய்ப்பாக நம் மனதுக்கு சரி என்று பட்டால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2 வருடங்களாக செய்திகளை விடாமல் இருந்தேன்.
கடைசியாக இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம். நான் பிரம்மித்துப் பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கதில் நிற்கிற வாய்ப்பு. உலகத்து சினிமாக்காரர்கள் எல்லாம் வாய் பிளந்து வியந்த ஒரு நடிகன் என் பெயரை உச்சரிக்கப் போகிற ஒரு வாய்ப்பு.
அவர் பக்கதில் நின்று பேசி இருக்கேன் என்று என் அடுத்த சந்ததியிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பு. வெற்றி பெறுவதெல்லாம் வேற விஷயம். முதலில் இந்த வாய்ப்பு என்பதே அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. இதை கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும் என்று தான் இந்த முடிவு. எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து.
உள்ளே. நான் நானாக” இவ்வாறு அனிதா சம்பத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 4