பிக்பாஸ் மூலம் கிடைத்த பணம்... தாயை வழக்கில் இருந்தே விடுவிக்கும் முயற்சியில் கவின்...!

பிக்பாஸ் மூலம் கிடைத்த பணம்... தாயை வழக்கில் இருந்தே விடுவிக்கும் முயற்சியில் கவின்...!
கவின் மற்றும் அவரது தாய்
  • News18
  • Last Updated: September 28, 2019, 4:36 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின், தாய் மற்றும் உறவினர் ஒருவரை ஜாமினில் இருந்து வெளியே எடுத்துள்ள கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கிடைத்த பணம் மூலம் தாயை வழக்கில் இருந்தே விடுவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், மிக முக்கியமானவராக கருதப்பட்டவர் கவின்.

அமைதியாகவே இருந்த கவின், லாஸ்லியா உடனான காதலுக்குப் பின்னரே செய்திகளில் அடிபட்டார். கவின் - லாஸ்லியாவின் காதல் நிகழ்ச்சியில் முக்கியமாக பார்க்கப்பட்டது.


ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியே இவர்களின் காதலை வைத்தே சில நாட்கள் நகர்ந்தது. இந்த நிலையில், இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும். ஆனால், தற்போது ரூ.5 லட்சம் தருகிறேன். எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம் என்று பிக்பாஸ் அறிவிக்க, மறுகணமே பணத்தை பெற சம்மதித்து, பின்னர், கவின் அங்கிருந்து வெளியேறினார்.

கவின் வெளியேறிய பின்னர் லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டில் மிக சோகமாகவே காணப்படுகிறார். நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் சேர்க்க கவின் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வரலாம் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கவின் தனது தாயை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கவினின் தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ஏன் தண்டனை?திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தமயந்தி இவருடைய மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இவர்களும் தமயந்தியின் கணவர் அருணகிரி மற்றும் மகன் சொர்ணராஜன் ஆகியோரும் அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998-ம் ஆண்டு முதல் 2006 -ம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.

இந்த சீட்டு கம்பெனியில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்று தர வேண்டும் எனவும் கடந்த 2007 -ம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு மோசடி வழக்கில் 5 வருட சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி இரண்டு வருட சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜலட்சுமி, நடிகர் கவினின் தாயார் ஆவார்.  பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை கவினுக்கு, இந்த தண்டனை குறித்து தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கவின், தாய் மற்றும் உறவினர் ஒருவரை ஜாமினில் வெளியே எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருச்சி மகளிர் சிறையில் இருந்து தாயை அவர் இரு நாட்களுக்கு முன்னர் ஜாமினில் எடுத்ததாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் மூலம் கவின் சம்பாதித்தது எவ்வளவு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியில் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது என்றாலும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கப்படுகிறது.

மதுமிதா, ஷாக்‌ஷி ஆகியோர் தாங்கள் பெற்ற பணத்தை வெளிப்படையாகவே கூறினர். 95 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த கவின் சுமார் ரூ.30 லட்சம் (பிக்பாஸ் இறுதியில் அளித்த ரூ.5 லட்சம் உள்பட) வரை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சீட்டு கம்பெனி மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி அளித்தால், தனது தாயை வழக்கில் இருந்து விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதால், அந்த முயற்சியில் கவின் இறங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பேசி, பணத்தை திருப்பி அளித்து விடுவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்.

அனைவருக்கும் பணத்தை அளித்துவிட்டால், கவினின் தாய் தண்டனையில் இருந்து நிரந்தரமாக விடுதலையாக வாய்ப்பு உள்ளது.

Also See...

First published: September 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading