ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோவிலில் மாலையுடன் நிற்கும் பிக் பாஸ் ஷிவானி நாராயணன்.. விஷயம் தெரியுமா?

கோவிலில் மாலையுடன் நிற்கும் பிக் பாஸ் ஷிவானி நாராயணன்.. விஷயம் தெரியுமா?

ஷிவானி

ஷிவானி

பிக் பாஸ் ஷிவானி, மாலையும் கையுமாக கோவிலில் நிற்கும் ஒரு புகைப்படத்தையும், கோவில் மாடுகளுக்கு தீனி கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக 'ஷேர்' செய்து உள்ளார்.

சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிலான கவர்ச்சி மற்றும் வயதை மீறிய வளர்ச்சியால் பல இளசுகளை தனக்கு ரசிகர்களாக்கி, ஜொள்ளு விட வைத்து, தனக்கான ஒரு ஆர்மியையே உருவாக்கி வைத்து இருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். ஆனால் ஷிவானியின் 'ஹாட்' ஆன போட்டோக்கள் மற்றும் வீடியோக்களால் 'லைக்ஸ்'களை மட்டுமே வாங்க முடிந்தது, சினிமாவில் பெரிய அளவிலான வாய்ப்புகளை வாங்க முடியவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் மற்றும் வைகைப்புயல் வடிவேலுவின் 'கம்பேக்' திரைப்படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற திரைப்படங்களில் ஷிவானி நாராயணன் நடித்துள்ளார் / நடிக்கிறார் என்றாலும் கூட தற்போது வரை வெள்ளித்திரையில் இவர் ஜொலிக்கவில்லை; ஷிவானியின் இன்ஸ்டாகிராம் மந்திரங்கள் எதுவுமே பலிக்கவில்லை என்பதே நிதர்சனம். ஆனால் சின்னத்திரையில் ஓரளவு பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ளார் என்றே கூறலாம்.

இப்படியொரு கிடா விருந்து பார்த்திருக்கீங்களா? குக் வித் கோமாளி மணிமேகலை வெளியிட்ட வீடியோ!

ஷிவானி நாராயணன் கடந்த 2016 - 2019 ஆம் ஆண்டு வரை ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' என்கிற சீரியலில் சினேகா அர்ஜுன் என்கிற காதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் சரவணன் மீனாட்சி 3 மற்றும் ராஜா ராணி சீசன் 1 போன்ற தொடர்களில் சிறப்பு தோற்றத்திலும் வலம் வந்தார். பிறகு ஜோடி ஃபன் அன்லிமிட்டெட்டில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார், உடன் கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் நடித்தார்.

அதன் பிறகு ஸ்டார் விஜய் டிவிக்கு 'டாட்டா' காட்டிவிட்டு ஜீ தமிழ் சேனலுக்கு 'ஜம்ப்' அடித்தார். அங்கு ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்காக மீண்டும் விஜய் டிவிக்கே வந்தார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கூட, ஷிவானி பெரும்பாலும் தான் உண்டு, தன் இன்ஸ்ட்டாகிராம் பேஜ் உண்டு என்று தான் உலா வருகிறார்.

காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்! தீயாய் பரவும் தகவல்

இதற்கிடையில் ஷிவானி, மாலையும் கையுமாக கோவிலில் நிற்கும் ஒரு புகைப்படத்தையும், கோவில் மாடுகளுக்கு தீனி கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக 'ஷேர்' செய்து உள்ளார். கோவிலு சென்று பட்டை போடும் அளவிற்கு அம்மணி வாழ்க்கையில் அப்படி என்ன விசேஷம் என்று பார்த்தால், ஷிவானி நாராயணனுக்கு 21-வது பிறந்தநாளாம், தன் பிறந்தநாளை முன்னிட்டே ஷிவானி கோவிலுக்கு சென்று உள்ளார்.


கோவிலில் கொடுக்கப்பட்ட சாமி மாலையை தான் தன் கையில் வைத்தபடி போஸ் கொடுத்து உள்ளார் ஷிவானி. தான் எங்கே சென்றாலும் அங்கே ஒரு போட்டோஷூட் நடத்துவது ஷிவானிக்கு ஒன்றும் புதிதல்ல வழக்கமாக செய்வது தான்; 3.5 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள் என்றால் சும்மாவா.. நீ நடத்து மா!

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil, Vijay tv