ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் இவரா?

பிக் பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் இவரா?

பிக் பாஸ் ஆயிஷா

பிக் பாஸ் ஆயிஷா

ஆயிஷாவை சீரியலில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் தேவ் என்பது அனைவருக்கும் தெரியும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் குறித்த பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பிக் பாஸ் சீசன் 6 தற்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. சண்டை, வாதம், அழுகை, பாசம் என நவரசத்தை போட்டியாளர்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். முதல் போட்டியாளராக டான்ஸ் மாஸ்டர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தற்போது 20 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இதில் அசீம் vs ஆயிஷா சண்டையில் இருந்து ஹவுஸ்மேட்ஸ் இன்னும் வெளியே வரவில்லை.அசீம் மீது அனைத்து போட்டியாளர்களும் அதிரூப்தியை தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஆயிஷா மீது ஒருசில போட்டியாளர்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். ஆயிஷா பிளான் செய்து கேம் விளையாடுவதாக தெரிவித்துள்ளனர்.

  பிக் பாஸ் செல்வதற்கு முன்பு ஜிபி முத்து செய்த காரியம்! வெளியானது வீடியோ

  கண்டிப்பாக கன்டெண்ட் டி.ஆர்.பியாக  ஆயிஷா இருப்பார் என்று தான் பிக் பாஸ் குழு அவரை அணுகி இருக்கும். முதல் நாள் தொடங்கி தற்போது வரை எல்லா ஆங்கிளும் ஸ்கோர் செய்து வருகிறார் ஆயிஷா. கடந்த வாரம் நடந்த கதை சொல்லட்டுமா டாஸ்கில் தன்னுடைய பர்சனல் கதையை கூற விரும்பவில்லை என கூறி இருந்தார். அதே போல் சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் மனம் விட்டு பேசுகையில் டிக் டாக் செய்யும் போது நான் ஒருவரின் கட்டுபாட்டில் இருந்தேன் என கூறி இருந்தார். இதை ரசிகர்கள் நோட் செய்து விட்டனர். உடனே அவரின் பர்சனல் லைவ் பற்றி ஆரய தொடங்கி விட்டனர்.

  இயக்குனர் தேவ்

  அதாவது ஆயிஷாவை சீரியலில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் தேவ் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பின்பு ஆயிஷா சத்யா சீரியலில் பிஸி ஆனார். அதன் பிறகு அவருக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் லவ் ட்ராக் ஓடுவதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இந்நிலையில் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் இயகுனர் தேவ் , ஆயிஷாவை பிரிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல் இப்போது ஆயிஷா, யோகேஷ் என்பவருடன் நட்பு கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். தேவ்வின் இந்த பேட்டி இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, TV Serial, Zee tamil