ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஈரோட்டை சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் தனலட்சுமி யார்? நடிப்பில் பிச்சு உதரும் அவரின் ரீல்ஸ் வீடியோவை பாருங்க..

ஈரோட்டை சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் தனலட்சுமி யார்? நடிப்பில் பிச்சு உதரும் அவரின் ரீல்ஸ் வீடியோவை பாருங்க..

தனலட்சுமி

தனலட்சுமி

Biggboss Contestant Dhanalakshmi : தனலட்சுமியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை பாருங்க..

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிக்கும் கிடைக்காத வரவேற்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியானது 20 போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பி, அவர்களுக்கு பல விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு இறுதியில் யார் மக்கள் ஆதரவால் டைட்டில் வின் பண்ணுகிறார் என்பது தான்.

  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சீசன் 1 முதல் சீசன் 5 வரை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.  தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஆரவாரத்துடன் தொடங்கியுள்ளது. பிக்பாஸ் 6 வீடானது எந்த சீசனிலும் இல்லாத வகையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.  பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர். ஜிபி முத்து, அசல், ஷிவின் கணேசன், அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா,மணிகண்ட ராஜேஷ், ரச்சிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி,ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி மாஸ்டர், விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சானக்யன், விஜே கதிரவன்,குயின்சி, நிவா, தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

  சின்னத்திரை பிரபலங்கள், மாடல், நடிகை, பாடகர் என பல விதமான திறமை உள்ளவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு மத்தியில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான தனலட்சுமியை மக்களில் ஒருவராக(commoner) தேர்ந்தெடுத்துள்ளனர். யார் இந்த தனலட்சுமி ? தனலட்சுமி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு 21 வயதாகிறது. தனலட்சுமிக்கு நடிப்பது என்றால் அப்படி ஒரு இஷ்டமாம். இன்ஸ்டாகிராமில் காஞ்சனா, அருந்ததி மற்றும் பல கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தனலட்சுமியை இன்ஸ்டாகிராமில் 96,000 நபர்கள் பின்தொடர்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனலட்சுமி கலந்துக்கொண்டுள்ளதற்கு இவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  தனலட்சுமியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ இதோ :
   
  View this post on Instagram

   

  A post shared by Dhanalakshmi (@__.dhanalakshmi__)  அருந்ததியாகவே மாறிய தனலட்சுமியின் ரீல்ஸ் வீடியோ..
   
  View this post on Instagram

   

  A post shared by Dhanalakshmi (@__.dhanalakshmi__)  எந்த ஒரு ரீல்ஸ் வீடியோ செய்தாலும் அந்த கதாபாத்திரம் போலவே தத்ரூபமாக மேக்கப் போட்டு நடிக்கிறார் தனலட்சுமி..
   
  View this post on Instagram

   

  A post shared by Dhanalakshmi (@__.dhanalakshmi__)  தனலட்சுமியின் காஞ்சனா ரீல்ஸ் வீடியோ..

  பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக்கொள்வேன் என்று தனலட்சுமி கூறியுள்ளார்.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6