• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு - கைதான பிக் பாஸ் பிரபலம்

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு - கைதான பிக் பாஸ் பிரபலம்

யுவிகா

யுவிகா

பிக் பாஸ் யுவிகா செளத்ரியை ஹரியானா போலீசார், நேற்று கைது செய்தனர்.

  • Share this:
    பட்டியலின மக்கள் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிக் பாஸ் பிரபலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியில் இளம் நடிகையாக இருப்பவர் யுவிகா செளத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். மற்ற பிரபலங்களைப் போலவே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யுவிகா, தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    அந்த வகையில் கடந்த மே மாதம் பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, இவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு சரமாரியான எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, யுவிகா செளத்ரி மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் நடிகை யுவிகா செளத்ரியை ஹரியானா போலீசார், நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜாமீன் கோரிய அவர், ஹரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், யுவிகா செளத்ரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் யுவிகா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: