பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? ஃபினாலே வாரத்தில் நடக்க போவது என்ன? போன்ற பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்து அதில் வெற்றி காண்பதில் விஜய் டிவியை அடித்துக் கொள்ள முடியாது. அந்த வகையில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு விஜய் டிவி தமிழில் ஒளிப்பரப்பிய பிக் பாஸ் மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. இதனால் மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காட்டிலும் பிக் பாஸ் ஷோவின் டி.ஆர்.பி டாப்பில் இருக்கிறது. இதுவரை 5சீசன்கள் வெற்றிக்கரமாக நடந்து முடிந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த நிலையில், 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சி அறிமுகமானது.
இதையும் படிங்க.. என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்.. வருத்தப்பட்ட ராஜா ராணி 2 அர்ச்சனா அம்மா!
இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ்ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.அதே போல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் வித்யாசமாக புரமோ மூலம் அறிவிக்கப்பட்டன. சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டனர்.
வழக்கம் போல ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேறிய நிலையில்,5வது வாரத்தில் 2 வைல்டு கார்டு என்ட்ரி நடந்தது. சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சதீஷ் உள்ளே வந்தனர். தற்போது இந்த இருவரும் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆகிவிட்டனர். அதன் பின்பு வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை ஷோவில் இருந்து சுஜா, தாடி பாலாஜி, வனிதா, சினேகன், அனிதா சம்பத், ஷாரிக், அபிநய் ஆகியோர் வெளியேறி விட்டனர். இப்போது நிகழ்ச்சியில் மிஞ்சி இருப்பவர்கள் தாமரை செல்வி, பாலாஜி, ஜூலி, அபிராமி, ரம்யா பாண்டியன், ஸ்ருதி , நிரூப். இதில் இந்த வாரம் 2 எவிக்ஷன் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்யா – மல்லிகாவை கெஞ்ச விட்டு மிரட்டும் ஸ்ருதி.. இப்படியொரு வில்லத்தனமா?
ஏபரல் 2வது வாரத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான ஃபைனல்ஸ் நடைபெறும் என தெரிகிறது. இந்த வாரம் 2 பேர், வெளியேறினால் மீதம் இருக்கும் 4 பேர் ஃபைனல்ஸ் வாரத்திற்கு செல்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக இருவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் பாலாஜி மற்றும் ஜூலி. இவர்கள் இருவருக்கும் நிறைய ஃபேன்ஸ்கள் இருப்பதாகவும், இருவரும் முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜுலி பிக் பாஸ் முதல் சீசனில் பெற்ற சர்ச்சைகள் அனைத்தையும் இந்த சீசனில் மாற்றி எழுதிவிட்டார். இந்த சீசன் மூலம் அவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் கிடைத்துள்ளது. அதே போல் தான் பாலாஜி முருகதாஸ். சீசன் 4ல் விட்டதை இந்த அல்டிமேடில் பிடித்துவிட்டார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Balaji murugadoss, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv