• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இன்னும் எங்கள பைத்தியகாரங்களாவே நினைச்சிட்டு இருக்கீங்களா? பிக் பாஸ் வைல்டு கார்டில் யார் பெயர் பாருங்க!

இன்னும் எங்கள பைத்தியகாரங்களாவே நினைச்சிட்டு இருக்கீங்களா? பிக் பாஸ் வைல்டு கார்டில் யார் பெயர் பாருங்க!

பிக் பாஸ் வைல்டு கார்ட்

பிக் பாஸ் வைல்டு கார்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என ரசிகர்கள் கருதுவதால் வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் அபிஷேக்கை அனுப்ப இருப்பதாக தகவல்

  • Share this:
    பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் அபிஷேக்கை அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 44 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவரை அனைவரையும் மூளை சலவை செய்து தனது கருத்துக்களை திணித்து வந்தார். மேலும் பிரியங்கா, நிரூபிடம் ஒன்றாகவே அபிஷேக் இருந்தார்.

    பிரியங்கா புகழ் பெற்ற நபர் என்பதால் அவருடன் இருந்தால் தான் தனது முகம் மக்களுக்கு தெரியவரும் என்பதால் தான் அவருடன் இருக்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறி வந்தார். மேலும் என்ன டாஸ்க் நடந்தாலும் அதில் பிரச்னையை ஏற்படுத்தி கொண்டிருந்ததால் அவர்மூலம் நல்ல கண்டென்ட்டுகள் கிடைத்தது. அபிஷேக் இருந்தவரை அவர்தான் மூன்று ப்ரோமோக்களிலும் பெரும்பாலும் காணப்படுவார். ஆனால் அவரது செயல் சக ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு எதிராக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.

    பின்னர் இரண்டாவது வார நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக் இருந்த நிலையில் குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் அவர் வெளியற்றப்பட்டார். இதனை தொடர்ந்து சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா என அடுத்தடுத்து வெளியேறினர். இந்தநிலையில் தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் 9 பேர் இந்த வார நாமினேஷனில் இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    இதனிடையே கடந்த சீசன்களை போல பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என ரசிகர்கள் கருதுவதால் வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் அபிஷேக்கை அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் நல்ல கன்டென்டுகள் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அபிஷேக் சென்ற பின்னர் தான் பிரியங்கா தனித்துவமாக தனது கேமை விளையாடி வருகிறார். இதனால் அபிஷேக் மீண்டும் வந்தால் நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்றே கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: