Home /News /entertainment /

பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது வரம்பை மீறினார்களா? கோபத்தில் கமல்!

பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது வரம்பை மீறினார்களா? கோபத்தில் கமல்!

 பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளான பாவனி, ராஜு மற்றும் சிபி ஆகியோருடன் பாவனி ஆவேசமாக சண்டை போட்டிருக்கிறார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 68ம் நாளான நேற்று தேர்தல் பிரச்சார டாஸ்க் நிறைவடைந்தது. வீட்டில் உள்ள NPP மற்றும் BBMK காட்சிகள் இணைந்து NPMK என்கிற புதிய கட்சியாக உதயமானது. அதனை தொடர்ந்து, அனைவரும் சென்று ரகசியமான வகையில் வாக்களித்துவிட்டு வந்தார்கள். ராஜு - சஞ்சீவ் கட்சி கூட்டணி சேர்ந்ததால் அவர்கள் அணி 7 வாக்குகள் மற்றும் பிரியங்கா அணி 5 வாக்குகள் பெற்றது. இதில் ஜெயித்ததால் இமான் அண்ணாச்சி  தலைவர் ஆனார்.

  ஆனால் அவர்கள் அணியில் இருந்தது மொத்தம் 8 பேர். அதில் ஒருவர் எதிரணிக்கு வாக்களித்து இருக்கிறார். அது யார் என்பது தான் தற்போதைய புது பிரச்சனையாக உருவெடுத்தது. ஒவ்வொருவரும் யாருடா அந்த கருப்பு ஆடு என ஒருவரை ஒருவர் விசாரித்தனர். ராஜுவும் தனது கட்சி ஆட்களிடம் யாருக்கு ஓட்டு போட்டாய் என சத்தியம் வாங்குகிறார். ஆனால் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த காட்சிகள் பார்ப்பதற்கு சிரிப்பையே வரவழைத்தன. இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்பட்ட டாஸ்க் மூலம் வீட்டில் பல பெரிய சண்டைகள் நிகழ்ந்ததையும் கண்டோம். அதில் மிக சென்சிட்டிவாக பார்க்கப்பட்ட சண்டை தான் அபிநய் மற்றும் பாவனி விவகாரம்.

  ஏற்கனவே ராஜு ஒருமுறை அபிநயிடம் " நீங்கள் பாவனியை விரும்புகிறீர்களா?" என்று கேட்டது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது. இதை பற்றி இனி யாரும் பேசவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். ஆனால் இந்த வார டாஸ்கில் இருவரின் பேரும் மீண்டும் மீண்டும் அடிபட்டது. இறுதியாக, நடந்த ஒரு டாஸ்கில் கூட ராஜு மற்றும் பிரியங்கா இடையே நடந்த வாக்குவாதத்தில் அபிநய் - பாவனி உறவு பற்றி பேச்சு வந்தது. இதனால், மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளான பாவனி, ராஜு மற்றும் சிபி ஆகியோருடன்  ஆவேசமாக சண்டை போட்டிருக்கிறார். "நான் அபிநய் கூட எப்போ வேணும்னாலும் பேசுவேன். இது என்னுடைய பர்சனல், நீங்க யாரு கேள்வி கேட்க" என ராஜூவை பார்த்து கோபத்துடன் கேட்டிருக்கிறார்.

  இதனை தொடர்ந்து பேசிய சிபி, ஏற்கெனவே நடந்த ஒரு டாஸ்கில் "அபிநய் - பாவனி இடையே இருக்கும் விஷயம்.. நட்பு மட்டும் அல்ல, நட்பு - லவ் இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என கூறிய போது, அதற்கு வீட்டில் இருக்கும் அதிகம் பேர் Yes என போர்டை காட்டினார்கள். அப்போது ஏதும் பேசாமல் இப்போது என்ன கேள்வி கேட்கறீங்க. நான் இந்த விஷயத்தை பத்தி பேசுவேன்" என ஆக்ரோஷமாக கத்தியுள்ளார். பின்னர், நேற்று இரவே பாவனி சமாதானமாகி ராஜு மற்றும் சிபியிடம் பேசிவிட்டார்.  இந்த நிலையில், 69ம் நாளான இன்று வெளியான ப்ரோமோவில் இந்த விவகாரம் குறித்து பேசிய கமல்ஹாசன், "இது என் தனிப்பட்ட விவகாரம் என்று ஒரு நபர் பிரகடனப்படுத்திய பிறகு, அதில் தலையிடுவது, அதைப்பற்றி பொதுவெளியில் விவாதிப்பதோ வரம்புக்கு உட்பட்டதா? வரம்பு மீறியதா? எது வரம்பு? விவாதிப்போம் வீட்டிற்குள்ளேயும், நாமும்." என்று பேசியுள்ளார். வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் அவர் என்ன கேட்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி