Home /News /entertainment /

ஒரு மாசத்துக்கு ரூ. 5 லட்சம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவரின் சம்பளம் இதுதான்!

ஒரு மாசத்துக்கு ரூ. 5 லட்சம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவரின் சம்பளம் இதுதான்!

பிக்பாஸ் 5

பிக்பாஸ் 5

பிக் பாஸ் ஒரு சீசனுக்கு மட்டும் அவருக்கு ரூ.17.5 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டதாம்.

    பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய பல தகவல்களை ரசிகர்களாகிய நீங்கள் கட்டாயம் அறிந்து வைத்திருப்பீர்கள். முதன் முதலில் இந்தி மொழியில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பின்னர் கன்னடம், பெங்காலி, தமிழ், மராத்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    தமிழகத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இந்த நாள் வரையிலும் கமலஹாசன் தான் அதை தொகுத்து வழங்கி வருகிறார். கடைசியாக முடிந்த சீசனில், இடையே சிறிது காலம் கமலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது, நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    முதன் முதலில், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களில் நடிகை ஓவியா, ஜூலி, இயக்குநர் சேரன், அமீர், நடிகை வனிதா, இமான் அண்ணாச்சி, ராஜு ஜெயமோகன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் போட்டியிட்டிருக்கின்றனர்.

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என நிரந்தர போட்டியாளர்கள் யாரும் கிடையாது. ஒவ்வொரு சீசனுக்கும் போட்டியாளர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அதேசமயம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மட்டும் மாற்றப்படவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவரை தவிர, இந்த நிகழ்ச்சியில் நிரந்தரமாக பணியாற்றி வரும் மற்றொரு நபர் இருக்கிறார். அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டை குரலில் பின்னணியில் இருந்து வாய்ஸ் கொடுக்கும் சாஷோ.

    இதையும் படிங்க.. ஏன் இப்படி செஞ்சீங்க? பிக் பாஸ் பாவ்னியை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

    பிக் பாஸ் தவிர வேறு எந்த நிகழ்ச்சி அல்லது திரைப்படத்துக்கும் இவர் இதுவரையில் வாய்ஸ் கொடுத்ததில்லை என கூறப்படுகிறது. அதேசமயம், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் இந்த கம்பீரமான கட்டை குரலின் ஒலி ஆழமாக பதிந்து இருக்கும். அந்த அளவுக்கு வார்த்தை உச்சரிப்பை தெளிவாகவும், உரக்கமாகவும் செய்வதில் கை தேர்ந்தவராக இருக்கிறார் சாஷோ. இன்னும் சொல்லப்போனால், இவரது குரலால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி தோரணை ஏற்படுகிறது என சொன்னால் அது மிகையாக இருக்காது.

    பிக் பாஸ் குரல் சாஷோ.


    ஒவ்வொரு சீசனிலும் 100 நாட்களுக்கு நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு, சாஷோ ஒருவர் மட்டுமே வாய்ஸ் கொடுத்து வருகிறார். பிக்பாஸ் 5 சீசனுக்கு அவர் பெற்றிருப்பதாகக் கூறப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டாலே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த ஒரு சீசனுக்கு மட்டும் அவருக்கு ரூ.17.5 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டதாம். அதாவது, 3 மாதமாக கணக்கிட்டால், மாதம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் வாங்கியிருக்கிறார் சாஷோ.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி