Home /News /entertainment /

பிக் பாஸ் பாவ்னிக்கு வருண் கொடுத்த ஷாக்.. இந்த ட்விஸ்டை அமீர் எதிர்பார்க்கல போல!

பிக் பாஸ் பாவ்னிக்கு வருண் கொடுத்த ஷாக்.. இந்த ட்விஸ்டை அமீர் எதிர்பார்க்கல போல!

பிக் பாஸ்  வருண்

பிக் பாஸ் வருண்

பாவ்னிக்கு வருண் கிஃப்ட் கொடுக்கிறார். இதை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமில்லை அமீரும் எதிர்பார்க்கவில்லை.

    பிக் பாஸ் 5ல் அமீர் மற்றும் பாவ்னி இருவரும் தான் நெருங்கிய நண்பர்கள் என கூறப்பட்டு வரும் நிலையில், பாவ்னிக்கு அமீர் செய்ய தவறியதை வருண் செய்து ஷாக் கொடுக்கிறார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி வரும் ஞாயிறுடன் முடியவுள்ளது. 18 போட்டியாளர்கள் உடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியி நடுவில் 20 ஆகி இப்போது ஒருவர் தான் வின்னர் என்று அறிவிப்புடன் முடியவுள்ளது. அந்த வின்னர் யார்? என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதி நிகழ்ச்சியில் தெரிந்து விடும். இதில் ராஜூ தான் வெற்றி வாகை சூட வாய்ப்புள்ளதாக நேற்று இணையத்தில் பல தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இது இறுதி வாரம் என்பதால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைக்கட்ட தொடங்கி விட்டது.

    இதையும் படிங்க.. விஜய் டிவி சீரியல் உருட்டுகள்.. ஒரு நாள் இரவு போதுமாம் சிலம்பம் கத்துக்க!

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பழைய போட்டியாளர்களும் உள்ளே வந்துள்ளனர். ஃபைனல்ஸூக்கு தயாராகும் அமீர், பாவ்னி, ராஜூ, பிரியங்கா, நிரூப்பை உற்சாகப்படுத்தவே இவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர். ஸ்ருதி, நாடியா, தாமரைச் செல்வி, சிபி, அபிநவ், வருண், அக்‌ஷரா ஆகியோர் உள்ளே வர பிக் பாஸ் வீடே கலகலப்பாகவுள்ளது. கூடவே பொங்கல் பண்டிகையும் வந்து விட்டதால் பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து பொங்கல் கொண்டாடுகிறார்கள். இதுக் குறித்த முதல் புரமோ ஏற்கெனவே வெளியாகிவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க.. குடும்பத்துடன் திருப்பதி போன பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. பக்தர்களுக்கு சொன்ன அந்த ரகசிய இடம்!

    அதாவது, பிக் பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி பல கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் அரங்கேறுகின்றன. அதில் வருண், வளையம் எறிதல் போட்டியில் கலந்து கொண்டு ஒரு பரிசை கைப்பற்றுகிறார். அந்த பரிசை அவர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாவனிக்கு கொடுக்கிறார்.



    அதற்கு காரணமாக அவர், கிஃப் கொடுக்கும் டாஸ்கில் யாருமே பாவனிக்கு கிஃப் கொடுக்கவில்லை என்கிறார். அமீர் பாவனிக்கு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் ராஜூவுக்கு கிஃப கொடுத்தார். இந்த வருத்ததை சரிசெய்ய, இப்போது பாவனிக்கு வருண் கிஃப்ட் கொடுக்கிறார். இதை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமில்லை அமீரும் எதிர்பார்க்கவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி