ஒரே ஒரு திரைப்படம் வழியாக இவ்வளவு ரசிகர்களை சம்பாதிக்க முடியுமா என்கிற கேள்விக்கு எடுத்துக்காட்டாக பல தமிழ் திரைப்படங்கள் இங்குண்டு. அதிலொரு திரைப்படம் தான் களவாணி.
பக்கத்து வீட்டு பையன் மற்றும் பொண்ணு போல கதாநாயகன், கதாநாயகி, கண்டிப்பான அப்பா, செல்லம் கொடுத்தே கெடுக்கும் அம்மா, வில்லனாக நாயகியின் அண்ணன், இரண்டு ஊர்களுக்கான மத்தியிலான தகராறு, கிராமத்து லவ் ஸ்டோரி, எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ஒரு பஞ்சாயத்து தலைவர் என பாசம், காதல், காமெடி, மசாலா என எந்த குறையும் இல்லாமல் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் - விமல் மற்றும் ஓவியாவிற்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
பின்னாளில் அவர்கள் அதை தக்கவைத்து கொண்டார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை! குறிப்பாக ஓவியா. தமிழ் சினிமாவில் ஒரு கனவு கன்னியாக மாறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் லோ பட்ஜெட் படங்களில் கவர்ச்சி நடிகையாக மாறிப்போனார்.
ஓவியாவிற்கான இரண்டாவது இன்னிங்க்ஸும் அவரின் களவாணி படத்தை போலவே சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது. அது பெரும் பரபரப்பிற்கு மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகும்.
அதிலொரு போட்டியாளராக கலந்து கொண்ட ஓவியா, தனது "ஓவர் லோடட் க்யூட்னஸால்" ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இன்னும் சொல்லப்போனால் ஆர்மியை உருவாக்கினார். அதாங்க ஓவியா ஆர்மி!
அதன் பிறகாவது சினிமா உலகில் வெற்றிநடை போட்டாரா என்று கேட்டால், அதுவும் கிடையாது. பிக் பாஸிற்கு பிறகு கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் கூட பரவாயில்லை, அவர் நடித்த 90எம்எல் திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு அடல்ட் மூவியாகவே வெளியானது. அதற்கு பின் ஓவியாவிற்கு பெரிய அளவில் எந்த படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இந்நிலைப்பாட்டில் தான் நடிகை
ஓவியா மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார். பிக் பாஸ் என்று வந்து விட்டால் ஓவியாவின் ஆர்மி, நடுவில் நடந்த கதைகளை மறந்து விட்டு விட்ட இடத்தில் இருந்து, அதாவது பிக் பாஸ் சீஸன் ஒன்றில் ஓவியா வெளியேறிய இடத்தில் இருந்து தொடர்வார்களா? அல்லது 5 சீஸன்களை பார்த்துவிட்டோம் என்கிற அனுபவத்தை காட்டுவார்களா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்படியாக ஓவியாவை சுற்றி பல கேள்விகள் சுழன்றடிக்கும் நேரத்தில் தான், பிக் பாஸ் சீஸன் 5 போட்டியாளர்களில் ஒருவரும், நடிகரும் ஆன வருணும் ஓவியாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க.. தாலி சென்டிமென்ட் போதும்.. வெற்றிக்கு தண்டனை வாங்கி தர போகும் அபிநயா!
பிக் பாஸ் சீஸன் 5-இல் மிகவும் 'கட் அன்ட் ரைட் ஆன ஆளுப்பா' என்று பெயர் வாங்கிய வருண் மற்றும் 'டஃப் ஆன பார்பி கேர்ள்' ஆக வலம் வந்த அக்ஷராவின் நட்பு இன்றும் ஒரு நல்ல உதாரணமாக பேசப்படுகிறது என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. ஏன் இப்படி செஞ்சீங்க? பிக் பாஸ் பாவ்னியை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!
மேலும் நினைவூட்டும் வண்ணம், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது 24 மணி நேரமும் ஒளிபரப்படவுள்ள ஒரு ரியாலிட்டி ஷோ ஆகும். ஆனால் இது டிவியில் ஒளிபரப்படாது; மாறாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழியாக வெளியாகும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.