பிக் பாஸ் சீசன் 2 புகழ் வைஷ்ணவி தன்னை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்ததாக அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான
பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஆர்.ஜே வைஷ்ணவி. இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து இருந்தார். வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு வழக்கம் போல் தனது பணிகளை கவனிக்க தொடங்கினார். ஒருபக்கம் ஆர்ஜே, மாடலிங் என பிஸியாக இருக்கும் வைஷ்ணவி, சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ். பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்களை அவ்வபோது வெளியிடுவார். அந்த வகையில் சமீபத்தில் வைஷ்ணனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னுடைய 19 வயதில் இது நடக்கும் என நினைக்கவில்லை.. யாஷிகா போட்ட பதிவு!
இந்த வீடியோவை
வைஷ்ணவி சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்திற்கு டேக் செய்து புகாராகவும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவுடன் சில விஷயத்தையும் வைஷ்ணவி பகிர்ந்துள்ளார். சென்னையில் தனது நாயுடன் வைஷ்ணவி நடைபயிற்சிக்கு சென்ற போது மர்ம நபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். நீண்ட நேரமாக வைஷ்ணவி ஆக்டிவிட்டிகளை நோட் செய்த அவர், வைஷ்ணவி செல்லும் இடமெல்லாம் ஃபாலோ செய்து இருக்கிறார். இதை கவனித்த வைஷ்ணனி ஃபோன் பேசுவது போல் நடித்து, அந்த நபரை வீடியோவாக எடுத்து உள்ளார்.
இப்படியொரு காரணத்திற்காக சன் டிவியின் முக்கிய சீரியல் முடிகிறதா? ரசிகர்கள் ஷாக்!
மேலும் தனது வீடு அந்த மர்ம நபருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக 30 நிமிடங்களுக்கு மேல் சாலையிலேயே நின்றதாகவும் வைஷ்ணவி குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பகத்தில் ஷேர் செய்து, அதை சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்திற்கு டேக் செய்து புகார் அளித்துள்ளார் வைஷ்ணவி.
அதற்கு பதில் அளித்துள்ள
சென்னை காவல்துறை இணையதள ட்விட்டர் பக்கம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்று நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் உதவி என்ற செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது வைஷ்ணவின் இந்த தைரியமான முயற்சிக்கு நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.