Home /News /entertainment /

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் - தாமரையின் பேச்சை கேட்டு கடுப்பாகும் சஞ்சீவ்..

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் - தாமரையின் பேச்சை கேட்டு கடுப்பாகும் சஞ்சீவ்..

பிக்பாஸ்

பிக்பாஸ்

Bigg Boss 3rd Promo : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 84 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட காரணங்களுக்கான நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து, நாடியா , அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.



இதனிடையே முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகை தந்தார். இவரை தொடர்ந்து சஞ்சீவ் மற்றும் அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தனர். ஆனால் அபிஷேக் ராஜா வந்த இரண்டாவது வாரத்திலேயே மீண்டும் வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்ற நிலையில் வருண், அக்ஷ்ரா வெளியேறினர்.

இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

also read : வெளியே செல்கிறேன்.. கதவை திறக்க கேட்கும் நிரூப் - பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது?

இந்தநிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்கான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் இன்று முதல் தொடங்குவது இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில் டிக்கெட் டூ ஃபினாலே வாய்ப்பை பெற உங்களில் இருந்து தகுதி இல்லாத ஒரு நபரை தேர்வு செய்து சொல்ல வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கும் காட்சிகள் இருந்தது.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், தாமரையிடம் கேள்வி எழுப்பும் பிரியங்கா, உனக்கு ஜெயிக்க வேண்டுமா? என கேட்கிறார். அதற்கு தாமரை எனக்கு யார் வெற்றி பெற்றாலும் சந்தோசம் என்கிறார். இதனை கேட்டு கடுப்பான சஞ்சீவ் , உங்களுக்கு எதுவுமே தெரியாமலா ஷோவிற்கு வந்தீர்கள்?, கேட்டால் என் மாமியார் பார்ப்பார் என்பதற்காக விளையாடுகிறேன் என கூறுவீர்கள் என கூறுகிறார். மேலும் இதுவரை இந்த ஷோவில் ஜெயிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? என கேட்கிறார்.

also read : தமிழ் படங்களுக்கு முன்னுரிமை - இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை



அப்போது குறுக்கிடும் பிரியங்கா, யார் வெற்றி பெற்றாலும் சந்தோசம் என கூறக்கூடாது, உனக்கு ஜெயிக்க வேண்டுமா? இல்லையா? என கேட்க, அதற்கு தாமரை "எனக்கு ஜெயிக்க வேண்டாம்" என கூறும் காட்சிகள் உள்ளது. உங்களில் இருந்து தகுதி இல்லாத ஒரு நபரை தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் அறிவித்துள்ள நிலையில், தாமரை இப்படி கூறுவதால் அவர் இந்த டாஸ்கில் இருந்து வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று நாமினேஷன் நடக்கும் என்பதால் யாரெல்லாம் லிஸ்டில் இடம்பெறுவார்கள் என இன்று தெரியவரும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

அடுத்த செய்தி