Home /News /entertainment /

வெளியே செல்கிறேன்.. கதவை திறக்க கேட்கும் நிரூப் - பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது?

வெளியே செல்கிறேன்.. கதவை திறக்க கேட்கும் நிரூப் - பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது?

நிரூப்

நிரூப்

Bigg Boss Today Promo : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அமீர், சஞ்சீவ் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு ட்விஸ்ட் இருந்தது. பிரியங்கா முதல் நபராக சேவ் செய்யப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்து பாவ்னி, சிபி காப்பாற்றப்பட்டனர் .

இறுதியாக நிரூப், வருண், அக்ஷ்ரா இருந்த நிலையில் முதலில் அக்ஷ்ரா எலிமினேட் செய்யப்படுவதாக கமல் அறிவித்தார். வருத்தம் இருந்தாலும் அதனை வெளிகாட்டாமல் சிரித்த முகத்துடன் கிளம்ப தயாரானார் அக்ஷ்ரா. அப்போது யாரும் எதிர்பார்காத வகையில் இரண்டு பேர் எலிமினேஷன் செய்யப்படுவதாக கமல் அறிவித்தார். அதில் வருண் பெயர் இருந்தது. எனவே அக்ஷ்ரா, வருண் இருவரும் ஹவுஸ் மெட்ஸிடம் இருந்து விடைபெற்றனர்.

அப்போது எனக்கு ஒரு பொண்ணு பொறந்தா உன்னை மாதிரி தைரியமா வளர்ப்பேன் என்று அக்ஷராவிடம் கூறினார் பிரியங்கா. இருவரும் வெளியேறுவதால் தாமரை அழுது கொண்டே இருந்தார். இதனை தொடர்ந்து வருண் வெளியே வந்ததும், அவர் ஹீரோவாக நடித்து வெளிவரவிருக்கும் ‘ஜோஷ்வா’ திரைப்படத்தின் டிரைய்லர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

also read : சீரியல் நடிகை நக்‌ஷத்ராவின் ‘நோ மேக்கப் லுக்’ போட்டோஸ்..



தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா, ராஜு, பாவ்னி, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்கான டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இன்று முதல் தொடங்குவது இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில் டிக்கெட் டூ பினாலே வாய்ப்பை பெற உங்களில் இருந்து தகுதி இல்லாத ஒரு நபரை தேர்வு செய்து சொல்ல வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார்.

also read : வலிமை தெலுங்குப் பதிப்பின் பெயர் என்ன தெரியுமா?



தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், உனக்கு டிக்கெட் டூ பின்னாலே வாய்ப்பு கிடைக்க கூடாது என தோன்றுகிறது என பிரியங்கா, நிரூப்பை பார்த்து கூறுகிறார். மேலும் நீ வலிமையாக இருப்பதால் என்னால் உன்னுடன் டாஸ்கில் போட்டிபோட முடியாது என்கிறார்.


அதற்கு நிரூப், உன்னுடன் போட்டிப்போட முடியாது என நான் எப்போதும் கூறியதில்லை, ஆனால் நீ இப்படி வெளிப்படையாக கூறுகிறாய். பிக் பாஸ் கதவை திறங்கள், நான் வெளியே போகிறேன்.  இவள் இருக்க வேண்டுமா? அல்லது நான் இருக்க வேண்டுமா என இப்போதே கூறுங்கள் என பேசும் காட்சிகள் உள்ளது. பிரியங்கா - நிரூப் முன்னர் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் டாஸ்க் என வந்துவிட்டால் இருவரும் மோதிக்கொள்வது வழக்கம். இன்றும் இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் நிலையில் இந்த டாஸ்கில் இருந்து விலகுவது யார் என்பது இன்று தெரியவரும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

அடுத்த செய்தி