Home /News /entertainment /

எங்க இருக்கீங்கன்னு தேட வேண்டியதா இருக்கு.. முகத்திற்கு நேராக போட்டுடைக்கும் கமல்

எங்க இருக்கீங்கன்னு தேட வேண்டியதா இருக்கு.. முகத்திற்கு நேராக போட்டுடைக்கும் கமல்

பிக்பாஸ்

பிக்பாஸ்

Bigg Boss Season 5 : இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சி 83 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கிறது.எல்லா சீசனை போல் இந்த பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளர்.தற்போது பிக்பாஸ் வீட்டினுள் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

    நிரூப்,சிபி, அக்‌ஷரா, வருண், தாமரை, ப்ரியங்கா, ராஜூ, பாவனி, சஞ்சீவ் மற்றும் அமீர். சஞ்சீவ், அமீர் இருவரும் வொயில்ட் கார்ட் போட்டியாளராக வீட்டினுள் நுழைந்து தற்போது வீட்டில் உள்ள அனைவருடனும் ஒன்றாக ஒன்றிவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.



    அமீரை தவிற அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து பிக்பாஸ் வீட்டில் அன்பு மழையை பொழிந்தனர்.அக்‌ஷரா, தாமரை, ப்ரியங்கா ஆகியோரின் பெற்றோர்கள் வரும் போது நம்மில் சிலர் கூட கண் கலங்கியிருப்போம்.

    அடுத்த வாரம் ‘ticket to finale'டாஸ்க் நடக்கவுள்ளதால் கமல்ஹாசன் தனியாக போட்டியாளர்களுக்கு அறிவுரை சொல்ல confession ரூமிற்கு அழைக்கிறார்.


    தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில், ’தாமரையிடம் ஒருத்தர் பேசி முடிக்கிறத்துக்குள்ள சண்டை போட ஆரம்பிச்சுடுறீங்க,ப்ரியங்காவிடம் உங்களோட கேரக்டரே ஒரு ஜாலியான கேரக்டர்ன்னு அவுங்க முடிவு பண்றதுக்கு முன்னாடி நீங்க முடிவு பண்ணிறீங்க என்று கூறுகிறார்.



    அக்‌ஷராவிடம் டாஸ்க் நேரம் தவிற நீங்க எங்க இருக்கீங்கன்னு தேட வேண்டியதா இருக்கு, அமீரிடம், ‘உங்கள் குவிப்பு ஒரே இடத்தில் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்’ என்று கமல்ஹாசன் அறிவுரை வழங்குகிறார்.

     

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Bigg Boss Tamil

    அடுத்த செய்தி