Home /News /entertainment /

தோத்த இடத்துல தானே ஜெயிக்க முடியும்? - மீண்டும் பிக் பாஸ்!

தோத்த இடத்துல தானே ஜெயிக்க முடியும்? - மீண்டும் பிக் பாஸ்!

பிக் பாஸ் அல்டிமேட் ப்ரோமோ

பிக் பாஸ் அல்டிமேட் ப்ரோமோ

விட்டதை பிடிக்க வீட்டுக்குள்ள வரப்போறாங்க, விடாம மல்லுக்கட்ட போறாங்க. அதை 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்ல காட்ட போறாங்க.

    டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    நடந்து முடிந்த பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இதில் போட்டியாளர்கள் பெற்ற குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட, பாவனி, பிரியங்கா, ராஜு, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதிப்போட்டிக்கு தேர்வானார்கள். நேற்று ஒளிபரப்பப்பட்ட இதன் இறுதிப் போட்டியில் ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவனி ரெட்டியும் பிடித்தனர். இதையடுத்து நான்காவது இடத்தை அமீரும், ஐந்தாம் இடத்தை நிரூப்பும் பிடித்தனர்.

    இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருக்கிறது. தற்போது இதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தோன்றும் பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் ஹாசன், வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களை பார்த்து, ’வீடு அப்படியே இருக்கட்டும் சுவரை தூக்கிக் கட்டுங்கள்’ என்கிறார். தொடர்ந்து பேசும் அவர், ஏன்னா வரப்போற ஆளுங்க அப்படி. நாம பாட்டுக்கு ஆடுற காலையும் பாத்துருக்கோம், சுவரையே தாண்டுன காலையும் பாத்துருக்கோம் இல்லையா. இப்போ வரப்போறவங்க வத்தியும் வச்சிருக்காங்க, வீட்டையே பத்தவும் வச்சிருக்காங்க. அதுக்கு தான் இது’ என்கிறார். அப்போது பிக் பாஸ் வனிதா, பிக் பாஸை கூப்பிடு என அவரது சீசனில் கோபப்பட்டதன் குரல் ஒலிக்கிறது.

    ’விட்டதை பிடிக்க வீட்டுக்குள்ள வரப்போறாங்க, விடாம மல்லுக்கட்ட போறாங்க. அதை 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்ல காட்ட போறாங்க. உங்களுக்கு தான் வேலை ஜாஸ்தி பிக் பாஸ். தொலைச்ச இடத்துல தானே தேட முடியும், தோத்த இடத்துல தானே ஜெயிக்க முடியும். இது பிக் பாஸ் அல்டிமேட்’ என்கிறார்.



    மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

    அந்த ப்ரோமோவில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இதில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Disney, Vijay tv

    அடுத்த செய்தி