Home /News /entertainment /

வக்கீலை வைத்து பார்த்துக் கொள்கிறேன்.. கண்ணீருடன் வெளியேறிய வனிதா!

வக்கீலை வைத்து பார்த்துக் கொள்கிறேன்.. கண்ணீருடன் வெளியேறிய வனிதா!

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

bigg boss ultimate : பிக்பாஸ், அவ்வளவு எளிதாக வெளியேற முடியாது, நீங்கள் ஸ்ட்ராங் பிளேயர், விதிமுறைகள் உள்ளன, அக்ரிமெண்ட்  என்று எவ்வளவோ பேசி வந்துள்ளார்.

  டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் வெற்றிகரமாக நான்காவது வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட்டைப் பொறுத்தவரை அதன் போட்டியாளர்கள் தான் மிகப்பெரிய அட்ராக்ஷனாக இருக்கிறார்கள் . சீசன் 1லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2லிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3 ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4 லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5 ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபினய் ஆகியோர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர்.

  பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் யாரும் எதிர்பார்க்காதபடி டாஸ்க் குயின் என்று அழைக்கப்படும் கடுமையான பெண் போட்டியாளரான சுஜா வெளியேற்றப்பட்டார். மூன்றாவது வாரம், யாரும் எதிர்பார்க்க படி, டபுள் எவிக்ஷனில் ஷாரிக் மற்றும் அபினய் எலிமினேட் ஆனார்கள்.

  இதையும் படிங்க.. இனி கமல் இடத்தில் சிம்பு.. பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு வருகிறார் STR!

  கடந்த வாரம் வெளியேறிய ஷாரிக் தான் சிறப்பாக ஃபெர்பார்மன்ஸ் செய்திருந்தார். அவரின் வெளியேற்றம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலரும் ஷாரிக்கை வைல்டுகார்டு என்ட்ரியாக மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் வனிதா விஜயகுமார் தானாகவே போட்டியிலிருந்து வெளியேறி இருக்கிறார். 22 ஆம் தேதி, வனிதா போட்டியிலிருந்து வெளியேறினார் என்பது உறுதியாகி யுள்ளது. இதற்கு என்ன காரணம்?

  வனிதா விஜயகுமார் இந்த காரணத்திற்காகத்தான் வெளியேறினார் என்று உறுதியாக கூறமுடியவில்லை. இருந்தாலும் அவரின் வெளியேற்றத்திற்கு பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தூண்டுதலாக இருந்தது. இதில் முதல் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஐந்து சீசன்களாக தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், திரைப்படங்களில் கமிட் செய்து இருப்பதால் இனி பிக்பாஸ் அல்டிமேட்டைத் தொகுத்து வழங்க முடியாது என்றும் சீசன் 6 ல் சந்திக்கலாம் என்றும் போட்டியாளர்களிடமே தெரிவித்து விடைபெற்றது முதல் காரணமாக கூறப்படுகிறது.

  அடுத்ததாக கடந்த வாரம், வனிதா ஒரு குழுவை சேர்த்துக்கொண்டு தனக்கு தான் விரும்பாத போட்டியாளர்கள் மீது பல்வேறு விதமான அவதூறுகளை பரப்பி வந்திருந்தார். போன வாரம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டின் தலைவியாகவும் வனிதா இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வனிதாவுக்கு ஆதரவாக, அவர் பேசியதற்கு எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டிருந்த அனைத்து ஹவுஸ்மேட்களும், கேப்டனுக்கு எவ்வளவு மார்க் கொடுப்பீர்கள் என்ற வார இறுதி டாஸ்கின்போது ஒரு மார்க், இரண்டு மார்க் என்று மிக குறைந்த மதிப்பெண்களை கொடுத்தது வனிதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

  இதையும் படிங்க.. தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!

  அது மட்டுமின்றி, பாலாஜி முருகதாஸ் செய்த பிரான்க் டாஸ்க்கால் ஏற்கனவே வனிதா கடுப்பாக இருந்தார். இதனால் பாலாஜி எலிமினேட் செய்யப்படுவார் என்று பலரும் கணித்திருந்தனர், அதில் குறிப்பாக வனிதா ஆணித்தரமாக கூறியிருந்தார். ஆனால், பிக்பாஸ் மற்றும் கமல், பதிலுக்கு மற்றுமொரு பிராங்க்  செய்தது மிகப்பெரிய ஹிட் ஆனது என்றும், பாலாஜி முருகதாஸ் ட்ரெண்டிங் பிளேயர் என்றும் தேர்ந்தெடுத்தது வனிதாவுக்கு பிடிக்கவில்லை என்பது மிகத் தெளிவாக இருந்தது. இது நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் வார இறுதி எபிசோடில் வெளிப்படையாகவே கேட்டார்.

  அது மட்டுமின்றி கடந்த வாரம் வனிதாவுக்கு ஆதரவளித்த அனைத்து போட்டியாளர்களும் இந்த வாரம் அவருக்கு எதிராக திரும்பியதை, அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாற்றி மாற்றி பேசுகிறார்கள், முதுகில் குத்துகிறார்கள், இழிவாக நினைக்கிறார்கள் என்று பல்வேறு வித பலவித குற்றச்சாட்டுகளுடன் பிக் பாஸிடம் கடந்த 2 நாட்களாக தன்னை வீட்டுக்கு அனுப்பிவிடும்படி கூறி வந்தார். ஆனால் பிக்பாஸ், அவ்வளவு எளிதாக வெளியேற முடியாது, நீங்கள் ஸ்ட்ராங் பிளேயர், விதிமுறைகள் உள்ளன, அக்ரிமெண்ட்  என்று எவ்வளவோ பேசி வந்துள்ளார். இதற்கும் வனிதா, வக்கீலை வைத்து பார்த்துக் கொள்கிறேன் என்றும் பதில் தந்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்நிலையில் நேற்று இரவு நடந்த தேவதை மற்றும் அரக்கர்கள் டாஸ்க்கில் தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகித்தனர். இதில் நிரூப்புக்கும் வனிதாவுக்கும் வார்த்தை போர் மூண்டது. இதற்கு மேல் தன்னால் விளையாட முடியாது என்று வனிதா மீண்டும் பிக் பாஸிடம் சென்று முறையிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, தெளிவாக சிந்திக்க முடியவில்லை, குழப்பமாக இருக்கிறது, பலவீனமாக உணர்கிறேன் என்றெல்லாம் கூறி, வனிதா வெளியேறி இருக்கிறார்.

  பார்வையாளர்களில் ஒரு தரப்பினர், வனிதா மற்றவர்களை என்ன பேசினாரோ, அது அவருக்கு நிகழ்ந்திருக்கிறது என்றும், மற்றொரு தரப்பினர் வனிதா பிக்பாஸில் இருந்து வெளியே வந்து விட்டீர்கள், ஆல் தி பெஸ்ட் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vanitha, Vijay tv

  அடுத்த செய்தி