Home /News /entertainment /

"குடி அல்லது கடி".. பெயரை கேட்டதும் எரிச்சலான வனிதா! பதில் சொல்ல முடியாது என வாதம்!

"குடி அல்லது கடி".. பெயரை கேட்டதும் எரிச்சலான வனிதா! பதில் சொல்ல முடியாது என வாதம்!

பிக் பாஸ் வனிதா

பிக் பாஸ் வனிதா

சண்டைக்கு பிறகு வனிதா மீண்டும் டாஸ்க்கிற்கு வர முற்பட்ட போது கேப்டனாக இருக்கும் ஷாரிக் அவரை அனுமதிக்கவில்லை

  சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் மகிழ்விக்கும் வகையில் பல ஷோக்கள் மற்றும் சீரியல்களை பிரபல முன்னணி சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. சீரியல்கள் ஒருபக்கம் ரசிகர்களை டிவி முன் ஆர்வமாக அமர வைக்கும் அதே நேரத்தில் அவற்றுக்கு பெரிய டஃப் கொடுத்து வருகின்றன வித விதமான கான்செப்ட்டில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோக்கள். தமிழ் சின்னத்திரையிலேயே அதிக ரசிகர்களை கொண்ட பிரமாண்ட ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ். இந்த ஷோவை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

  சமீபத்தில் தான் பிக்பாஸ் ஷோவின் 5-ஆம் சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்து. பிரபல சீரியல் நடிகர் ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த வருடம் அக்டோபர் 3 துவங்கி கடந்த ஜனவரி 16 வரை சுமார் 105 நாட்கள் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. பிக்பாஸ் சீசன் 5 துவங்கிய போது இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் இருந்தார்கள். பின் கொரியாகிராஃபர் அமீர், நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் ஆகியோர் வைல்டுக்கு கார்டு என்ட்ரி மூலம் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

  இதையும் படிங்க.. மீண்டும் வந்த ‘4 மணி ஷிவானி’.. அந்த ஃபோட்டோவை பார்த்தீங்களா?

  சீசன் 5 நடந்து கொண்டிருந்த போதே பிக்பாஸ் அல்ட்டிமேட் ஷோவிற்கான அறிவிப்பு வெளியானது. கடந்த 30-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்த ஷோவில் வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி பெரியசாமி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க் போட்டியாளர்களிடையே சண்டையை ஏற்படுத்தியது. சில கேள்விகள் கேட்கப்படும் அதற்கு செய்திருக்கிறேன் என்றால் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும், இல்லை என்பது பதில் என்றால் சிப்ஸ் சாப்பிட வேண்டும். கடி அல்லது குடி என்பது இந்த டாஸ்கின் பெயர். பல கேள்விகள் அடங்கிய பேப்பர் துண்டுகள் பவுல் உள்ளே போடப்பட்டு ஒவ்வொரு போட்டியாளர்களும் அந்த பாட்டிலில் இருக்கும் கேள்விகளை படிக்க வேண்டும். இதற்கு போட்டியாளர்களின் பதிலை பொறுத்து கசப்பு ஜூஸ் அல்லது சிப்ஸை அவர்கள் சாப்பிட வேண்டும்.  இதில் பிக்பாஸ் கேட்டிருந்த கேள்விகள் போட்டியாளர்கள் மத்தியில் மட்டுமல்ல ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் ஒன்பாத்ரூம் போய் இருக்கீங்களா, காண்டமை பலூன் போல வாயால் ஊதி விளையாடி இருக்கிறீர்களா, உள்ளாடை போடும் போது கால் தவறி கீழே விழுந்து இருக்கிறீர்களா, அடுத்தவர் மீது வாந்தி எடுத்து இருக்கிறீர்களா என்றெல்லாம் கேள்விகள் வர தாடி பாலாஜி, வனிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் சங்கடத்தில் நெளிந்தார்கள். இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது நான் டாஸ்க்கை விட்டு போகிறேன் என்று கூறிய வனிதாவிடம் பாலாஜி முருகதாஸ், ஷாரிக் மற்றும் நிரூப் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.

  இதையும் படிங்க.. இனி சீரியல்களில் என்னை பார்க்க முடியாது… ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை சொன்ன பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ!

  காண்டம் பற்றி சிறுகுழந்தைகள் தெரிந்து கொண்டால் என்ன தவறு, இந்த காலத்தில் இதெல்லாம் அவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்று வனிதாவிடம் வாதிட்டனர். குறிப்பாக பாலாஜி முருகதாஸ் - வனிதா இடையே வாக்குவாதம் முற்றியது. சிறிது நேரம் நீடித்த வாக்குவாதம் மற்றும் சண்டைக்கு பிறகு வனிதா மீண்டும் டாஸ்க்கிற்கு வர முற்பட்ட போது கேப்டனாக இருக்கும் ஷாரிக் அவரை அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vanitha Vijayakumar, Vijay tv

  அடுத்த செய்தி