Home /News /entertainment /

வனிதா விஜயகுமார், தாமரை... இவர்களுடன் ஒரு முன்னாள் காதல் ஜோடியும் பிக் பாஸ் அல்டிமேட்டில் எண்ட்ரி!

வனிதா விஜயகுமார், தாமரை... இவர்களுடன் ஒரு முன்னாள் காதல் ஜோடியும் பிக் பாஸ் அல்டிமேட்டில் எண்ட்ரி!

தாமரை - வனிதா

தாமரை - வனிதா

பிக் பாஸ் 5-ஐ முடித்த கையோடு பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு வந்திருக்கிறார் நிரூப். அவருக்கு மிளகு பரிசாக கிடைத்தது. ஜூலி மூன்றாவது போட்டியாளராக நுழைய அவருக்கு வெங்காயம் பரிசளிக்கப்பட்டது.

  பிக் பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி முடிந்த நிலையில், தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் தொடங்கியிருக்கிறது. டிவி-யில் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸுக்கு பதிலாக, 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  நடந்து முடிந்த பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பின்னர் அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

  இதில் போட்டியாளர்கள் பெற்ற குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட, பாவனி, பிரியங்கா, ராஜு, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதிப்போட்டிக்கு தேர்வானார்கள். நேற்று ஒளிபரப்பப்பட்ட இதன் இறுதிப் போட்டியில் ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவனி ரெட்டியும் பிடித்தனர்.

  பிக் பாஸ் 5 நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருக்கும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு எழ, தினம் ஒரு போட்டியாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நேற்று முதல் தனது ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. இதில் முதல் போட்டியாளராக வனிதா விஜயக்குமார் நுழைந்தார். இதற்கு முன்பு தான் செய்த தவறுகளை திருத்திக் கொள்வேன் என்ற வனிதாவுக்கு, தேன் பாட்டிலை பரிசளித்து வழியனுப்பினார் கமல்.  பிக் பாஸ் 5-ஐ முடித்த கையோடு பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு வந்திருக்கிறார் நிரூப். அவருக்கு மிளகு பரிசாக கிடைத்தது. ஜூலி மூன்றாவது போட்டியாளராக நுழைய அவருக்கு வெங்காயம் பரிசளிக்கப்பட்டது. அபிராமி மஞ்சளை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார். நிரூப்பும் அபிராமியும் முன்னாள் காதலர்கள் எனக் கூறப்படும் நிலையில், இவர்களை ஒரே நிகழ்ச்சியில் பார்க்க எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

  தாமரைச்செல்வி அரிசியுடன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைந்தார். பிரிந்த மனைவியுடன் கடந்த முறை பிக் பாஸ் வீட்டிற்கு வந்த தாடி பாலாஜி இந்த முறை குடும்ப சுமை இன்றி வந்துள்ளதாக தெரிவித்தார். அவருக்கு முருங்கைக்காய் கொடுத்து வழியனுப்பினார் கமல்.

  பிக் பாஸ் சீசன் 4-ல் இரண்டாவது இடம்பெற்ற பாலாஜி முருகதாஸ் இந்த முறை டைட்டிலை வென்றே தீருவேன் என்ற வெறியோடு உள்ளே சென்றார். அவருக்கு கீரை வழங்கப்பட்டது. அவருடன் நடனமாடிய அனிதா சம்பத்தும் பிக் பாஸ் அல்டிமேட்டில் நுழைந்தார்.  கையில் பூண்டுடன் 9-வது போட்டியாளராக நுழைந்தார் சுஜா வருணி. உப்புமாவுடன் கமலை சந்தித்த சுரேஷ் சக்ரவர்த்தி 10-வது ஆளாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைந்தார். அவருக்கு உப்பு வழங்கப்பட்டது. அடுத்ததாக ஷாரிக் போட்டியாளராக நுழைந்தார்.

  பின்னர் நெய்யுடன் உள்ளே சென்றார் அபினய். இதையடுத்து மீண்டும் பிக் பாஸ் 5-ன் போட்டியாளரான சுருதி, பிக் பாஸ் அல்டிமேட்டில் களம் இறங்கினார். இவர்களைத் தொடர்ந்து கடைசியாக சென்ற சினேகன், மனைவி கன்னிகாவுக்கு பிரியா விடை கொடுத்தார். அவருக்கு வாழைக்காய் வழங்கப்பட்டது.

  போட்டியாளர்கள் உள்ளே கொண்டு சென்ற பொருட்களை வைத்து ஏதேனும் டாஸ்க் இருக்குமா என்பதை அறிந்துக் கொள்ள ஆவலாக உள்ளனர் ரசிகர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil, Disney

  அடுத்த செய்தி