ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாலாஜி முருகதாஸ் இப்படி செய்யலாமா? கொந்தளித்த வனிதா

பாலாஜி முருகதாஸ் இப்படி செய்யலாமா? கொந்தளித்த வனிதா

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

கிட்டத்தட்ட 3 மணி நேரங்களுக்கு மேல் சென்ற இந்த டாஸ்க்கில், சினேகனைத் தவிர்த்து அனைவரும் யாரை வெளியேற்ற வேண்டும் என்று தங்கள் கருத்தை தெரிவித்தார்கள்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை கடக்க இருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட்டைப் பொறுத்தவரை அதன் போட்டியாளர்கள் தான் மிகப்பெரிய அட்ராக்ஷனாக இருக்கிறார்கள் . சீசன் 1-லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2-லிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3-ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4-லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5-ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் போட்டியாளராகக் கலந்துக் கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். அவர் இருந்த முதல் வாரம் கொளுத்தி போடு என்று பல பிரச்சினைகளை உருவாக்கி நாள் முழுவதும் மிகவும் சுவாரஸ்யமாக பரபரப்பாகவே வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் யாரும் எதிர்பார்க்காதபடி டாஸ்க் குயின் என்று அழைக்கப்படும் கடுமையான பெண் போட்டியாளரான சுஜா வெளியேற்றப்பட்டார். சுஜா மற்றும் தாடி பாலாஜி இருவருமே டேஞ்சர் ஸோனில் இருந்த போது, தாடி பாலாஜி வெளியேறாமல் சுஜா வெளியேறியது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் சுஜா நிகழ்ச்சி முழுவதுமே மிகவும் செயற்கையாக நடந்து கொண்டதால்தான் சுஜா வெளியேற்றப்பட்டார் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு வந்தது.

தற்போது மூன்றாவது வாரம் எண்பதுகளில் கல்லூரி டாஸ்க் நடந்து கொண்டு வந்திருக்கிறது. ஆனால், டாஸ்க் சுவாரஸ்யமாகவே இல்லை, பலரும் ஆர்வமாக பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டோடு பிக்பாஸ் டபுள் எவிக்ஷன் என்ற திட்டத்தை அறிவித்திருந்தார். டபுள் எவிக்ஷனை அறிவிக்க பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் டெலிபோனுக்கு, பிக் பாஸ் அழைப்பு விடுத்திருந்தார். ஓடிச்சென்று அந்த காலை அட்டெண்ட் செய்தார் பாலாஜி முருகதாஸ். அதில் பலரும் டாஸ்க்கை சுவாரஸ்யமாக செய்யாமல் இருப்பதால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கிறது என்பதை ஹவுஸ்மேட்ஸ்க்கு தெரிவித்து விடுங்கள் என்று கூறியிருந்தார்.

உடனடியாக பாலாஜி முருகதாஸ் ஒரு புதிய திட்டத்தை வகுத்தார். அதன்படி ஸ்பாட் எவிக்ஷன் நடக்கப் போகிறது என்று கூறிவிட்டு, ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் ஒரு போட்டியாளரை தேர்வு செய்து, அவரை எவிக்ஷன் செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர் பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூம் வழியாக வெளியேற்றப்படுவார் என்று கூறினார்.

இதனால் அனைத்து போட்டியாளர்களுமே பெரிய அதிர்ச்சி அடைந்தனர். கிட்டத்தட்ட 3 மணி நேரங்களுக்கு மேல் சென்ற இந்த டாஸ்க்கில், சினேகனைத் தவிர்த்து அனைவரும் யாரை வெளியேற்ற வேண்டும் என்று தங்கள் கருத்தை தெரிவித்தார்கள். சினேகனுகும் வனிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சினேகன் மட்டும் கூறாமல் இருந்தார். மிகவும் இழுத்துக்கொண்டே செல்கிறது என்று பாலாஜி முருகதாஸ் இந்த டாஸ்க்கை பிக்பாஸ் கொடுக்கவில்லை நான் தான் கொடுத்து உங்கள் அனைவரையும் பிரான்க் செய்தேன் என்று கூறினார். அவருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

ஒரே ஒரு சிறிய டாஸ்கில் பாலாஜி முருகதாஸ் ஒட்டுமொத்த வீட்டையும் பரபரப்பாக மாற்றி விட்டார். சுவாரஸ்யம் இல்லாமல் இருந்ததை முழுவதுமாக மாற்றி விட்டார். அது மட்டுமின்றி முகமூடிகள் அணிந்து கொண்டு விளையாடிய போட்டியாளர்களையும் வெளிப்படுத்தி காட்டினார், என்று பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Gangai Amaran: தமிழ் சினிமாவில் மனம் வீசும் கங்கை அமரன் பாடல்கள்!

ஆனால் வனிதாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும் அதிருப்தியும் ஏற்பட்டது. நீ யார் இந்த மாதிரி டாஸ்க்கை கொடுப்பதற்கு, இந்த மாதிரி டாஸ்க் கொடுக்கவேண்டும் அல்லது பிரான்க் செய்ய வேண்டுமென்றால் வீட்டின் தலைவரான என்னிடம் கேட்டிருக்க வேண்டும் என்று பாலாஜியுடன் சரமாரியான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் பாலா எல்லாவற்றுக்கும் கூலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

அதே போல டபுள் எவிக்ஷன் என்பதே பொய்யாகத்தான் இருக்கும், தொகுப்பாளர் கமல்ஹாசன் அதை வார இறுதியில் தான் அறிவிப்பார் என்று அனிதா ஆணித்தரமாக கூறிக் கொண்டிருக்கும் போதே வீட்டில் இருக்கும் டிவியில் “இந்த வாரம் டபுள் எவிக்ஷன் எல்லாரும் தயாராகுங்கள்” என்ற ஸ்லைடு ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போவார் என்ற என்பதைப் பற்றி ஹவுஸ்மேட்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் அபிநய், ஷாரிக் மற்றும் சினேகன் ஆகிய மூவரில் இருவர் வெளியேற்றப்படுவார் என்று பரவலாக கூறப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Bigg Boss Tamil