Home /News /entertainment /

பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதி கட்டம்.. வெற்றியாளர் இவர் தானா?

பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதி கட்டம்.. வெற்றியாளர் இவர் தானா?

பிக்பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட்

Bigg Boss Ultimate Finale : முதன்முறையாக பிக் பாஸில் ஆறு நபர்கள் ஃபைலன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 5 முடிந்த உடனேயே, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணிநேர ஒளிபரப்பாக பிக்பாஸ் அல்டிமேட் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு சீசனிலும் சில போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டனர். இந்த வாரம், பிக் பாஸ் அல்டிமேட்டின் இறுதி வாரம் ஆகும். இறுதிப்போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், போட்டியின் வெற்றியாளர் யாராக இருக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் படப்பிடிப்பு இருக்கிறது என்று மூன்றாவது வாரத்தில் வெளியேறி சென்றாலும் அவர் வெளியேறிய நான்கு நாட்களிலேயே விக்ரம் திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. இதனால் பிக் பாஸின் ஆஸ்தான தொகுப்பாளரான கமல்ஹாசன் ஏன் வெளியேறினார் என்பது இதுவரை தெரியவில்லை. வேறு யாரும் கமலைப் போல நிகழ்ச்சியை வழங்க முடியுமா என்று கேள்வி எழுந்தது. ஆனால் சிம்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் நிகழ்ச்சி களைக்கட்ட துவங்கியது.

இருப்பினும், ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று நடைபெற இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட்டின் கிராண்ட் ஃபினாலேவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி கமல்ஹாசன் இறுதிப் போட்டிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.



பாலாஜி முருகதாஸ், தாமரை செல்வி, நிரூப் நந்தகுமார், ஜூலி மரியானா, அபிராமி வெங்கடாசலம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதிப் போட்டியாளர்கள் ஆவார்கள். இவர்களில் ரம்யா மட்டுமே வைல்டு கார்டு என்ட்ரி. மூன்று வாரங்களுக்கு முன்பு வந்தவர். மீதமுள்ள போட்டியாளர்கள் முதல் நாளிலிருந்தே விளையாடி வருகிறார்கள்.

also read : கிராமி விருது வழங்கும் விழாவில் மகனுடன் கலந்துக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் - புகைப்படங்கள்

நேற்றைய வார இறுதி எபிசோடில் ஆறு போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டு ஃபைனலிஸ்ட்டாக ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நேற்று யாருமே எலிமினேட் செய்யப்படவில்லை. முதன்முறையாக பிக் பாஸில் ஆறு நபர்கள் ஃபைலன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்ருதி பெரியசாமி கடந்த வாரம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லாமல் இருந்தால் இறுதிப் போட்டியாளர்களின் பட்டியல் நிச்சயமாக மாறியிருக்கும்.



நேற்று வார இறுதி எபிசோடில், ஹாட்சீட்டில் அபிராமி மற்றும் ஜூலி இருந்தனர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் நேற்று வெளியே சென்றிருக்கக் கூடும் என்பதால் இவர்கள் வெற்றியாளராக இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இருந்தாலும் ஜூலிக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெருகியுள்ளது இதனால் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக கூட ஜூலி வரலாம் என்றும் கூறி வருகின்றனர்.

also read : பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதி போட்டி.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?



அது மட்டுமின்றி, பிக் பாஸ் இறுதி வாரத்தில், இதுவரை எலிமினேட் ஆகிச் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்களாக வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி முடிய இன்னும்  4 அல்லது 5 நாட்களே உள்ள நிலையில், பிக் பாஸ் அல்டிமேட்டின் வெற்றியாளராகும் வாய்ப்பு பாலாஜி முருகதாஸுக்கு அதிகம் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bigg Boss Tamil

அடுத்த செய்தி