ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் அல்டிமேட் வெற்றி மேடையில் எமோஷ்னல் ஆன சிம்பு- என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் வெற்றி மேடையில் எமோஷ்னல் ஆன சிம்பு- என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட்

Bigg Boss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை பாலாஜி முருகதாஸ் தட்டிச்சென்றார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ரியாலிட்டி ஷோக்களின் புதுமையான முயற்சியாக சின்னத்திரையில் மாபெரும் வெற்றி பெற்ற பிக்பாஸ் தமிழ் முதன்முறையாக 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்று ஒளிபரப்பாகி, இறுதி போட்டி முடிந்து வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டது.

24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பு மற்றும் ஏற்கனவே இதுவரை ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து 16 போட்டியாளர்கள் தேர்வு, ஆகிய இரண்டுமே பிக்பாஸ் அல்டிமேட்டின் சிறப்பம்சங்கள்.

ஒவ்வொரு சீசனிலும் மூன்று முதல் நான்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பிக்பாஸ் சீசன் 4 இல் ரன்னர்-அப்பாக வந்த பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீஸனில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் தமிழின் 5 சீசன் வரை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் ஒரு சில காரணங்களால் பிக்பாஸ் அல்டிமேட்டின் மூன்றாவது வாரத்திலேயே வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடிகர் சிம்பு முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். சிம்பு தொகுத்து வழங்கிய விதம் மற்றும் ஹவுஸ் மேட்ஸ் உடன் உரையாடியது ஆகிய அனைத்துமே ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

அது மட்டுமின்றி 24 மணிநேர நிகழ்ச்சியில் முக்கியமான விஷயங்களை சிம்பு பார்க்கிறார் என்பது அவர் கேட்கும் கேள்விகள் மற்றும் உரையாடல்களின் மூலம் வெளிப்பட்டது, ரசிகர்களை பெரிதாகக் கவர்ந்தது. பிக்பாஸ் அல்டிமேட்டில் வெற்றியாளராக இவர்களில் சிலர் தான் வருவார்கள் இரண்டு மூன்று போட்டியாளர்களைக் குறிப்பிட்டு என்று தொடக்கம் முதலே கூறப்பட்டு வந்தது.

also read : அந்த நடிகருடன் பிக் பாஸ் ராஜூ...ரசிகர்கள் சொன்ன விஷயம் இதுதான்!

அதில் பாலாஜி முருகதாஸின் பெயரும் ஒன்று. ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்து, சமூக வலைத்தளங்களில் மாஸான வரவேற்பை பெற்ற பாலாஜி முருகதாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் சிம்பு மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவருமே மிகவும் எமோஷனலாக பேசினார்கள். நடிகர் சிம்பு, ‘தனக்கு எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும் ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்புதான் தன்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அது மட்டுமின்றி சிம்புவுக்கு என்று மிகவும் அழகாக தொகுக்கப்பட்ட ஏவி இறுதி நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

also read : குக் வித் கோமாளி ரக்‌ஷனா இது? என்னமா ஸ்டண்ட் காட்டுறாரு.. வைரல் வீடியோ

சீசன் நான்கில் நான் வெற்றியாளராக வர முடியாது என்பது நன்றாகத் தெரிந்தது. மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் மேடையில் ரன்னர்-அப்பாக அறிவிக்கப்பட்டேன். இந்த வெற்றி என்னுடைய ரசிகர்களுக்கானது, ‘பாலா-ஃபேமிலிக்கு’ இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று எமோஷனலாகப் பேசினார் பாலா.

பிக்பாஸ் அல்டிமேட்டின் இரண்டாவது இடத்தில் நிரூப், மற்றும் இரண்டாவது ரன்னர்-அப்பாக ரம்யா பாண்டியன் மற்றும் மூன்றாவது ரன்னர்-அப்பாக தாமரைசெல்வி ஆகியோர் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராவிதமாக இறுதி வாரத்தில் ஜூலி வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

also read : பாரதி கண்ணம்மாவில் இன்னொரு பெரிய ட்விஸ்ட்... வெண்பாவே கொடுத்த ஹின்ட்!

 எல்லா சீசன்களிலும் வழங்கப்பட்டதைப் போலவே பிக்பாஸ் அல்டிமேட் வின்னருகும் ரூ. 50,00,000 பரிசு என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சீசன்களை போல அல்லாமல் பண பெட்டி வைக்கப்பட்டு, அதில் யார் எவ்வளவு தொகையை எடுத்துக் கொண்டு செல்கிறார்களோ அது வெற்றிப்பரிசின் தொகையில் இருந்து கழிக்கப்படும் என்று பிக்பாஸ் இந்த சீசனில் அறிவித்தார்.

அதன்படி ஸ்ருதி பெரியசாமி 15,00,000 ரூபாய் பணப் பெட்டியுடன் வெளியேறினார். எனவே வெற்றித் தொகையான 50,00,000 ரூபாயில் 15,00,000 ரூபாய் குறைக்கப்பட்டு, வெற்றியாளரான பாலாஜி முருகதாஸ்க்கு 35,00,000 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bigg Boss Tamil