Home /News /entertainment /

Bigg Boss Ultimate: வாய்ப்பு கிடைத்தும் வர மறுத்த நடிகை.. அதற்கு அவர் சொல்லும் காரணம் இருக்கே!

Bigg Boss Ultimate: வாய்ப்பு கிடைத்தும் வர மறுத்த நடிகை.. அதற்கு அவர் சொல்லும் காரணம் இருக்கே!

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

Bigg Boss Ultimate tamil: சிம்பு கடந்த வார நிகழ்ச்சியை முடிக்கும்போது இந்த வாரம் நீங்கள் ஒரு வைல்டு கார்டை எதிர்பார்க்கலாம் என்று கூறிவிட்டுச் சென்றார்.

    டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட்டில் ஆறாவது வாரம் நடைபெறுகிறது. பிக்பாஸ் அல்டிமேட்டைப் பொறுத்தவரை அதன் போட்டியாளர்கள் தான் மிகப்பெரிய அட்ராக்ஷனாக இருக்கிறார்கள் . சீசன் 1 லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2 லிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3 ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4 லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5 ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் போட்டியாளராகக் கலந்து கொண்டனர்.

    முதலில் 8 வாரம் தான் இந்த அல்டிமேட் சீசன் இருக்கும் என்று கூறப்பட்டட்து. ஆனால், தற்போது 10 வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் வந்துள்ள சுரேஷ் தவிர்த்து, சுஜா, அபிநய், மற்றும் ஷாரிக் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுவிட்டார்கள். வனிதா விஜயகுமார் தானாகவே வாக்-அவுட் ஆகிவிட்டார். மற்றொரு வைல்டு கார்டாக KPY சதீஷும் வந்துள்ளார்.

    இப்போது 10 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கடந்த வாரம் தாடி பாலாஜி வெளியேறினார். ஷோ மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், புதிய போட்டியாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளனர் பிக்பாஸ் குழுவினர்.

    வைல்டு கார்டாக யார் வருவார் என்ற கேள்விக்கு பார்வையாளர்கள் தங்களின் விருப்பமான போட்டியாளர்கள் பெயரைக் கூறினார்கள். அதில், பலரும் ஓவியா மற்றும் ஷெரின் ஆகியவர்களைக் குறிப்பிட்டார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், பிக் பாஸ் சீசன் 3 இல் பல சர்ச்சைகளில் சிக்கிய லாஸ்லியா தான் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளாராக வரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. சிம்பு தொகுத்து வழங்கிய கடந்த வார இறுதி நிகழ்ச்சியில், லாஸ்லியா அறிமுகமாகி வீட்டுக்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது வரை எந்த போட்டியாளரும் வைல்டு கார்டாக என்ட்ரியாக வில்லை.

    சரஸ்வதிக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி.. தமிழ் இப்படி செய்யலாமா?

    லாஸ்லியாவும் வரவில்லை என்றாலும், சிம்பு கடந்த வார நிகழ்ச்சியை முடிக்கும்போது இந்த வாரம் நீங்கள் ஒரு வைல்டு கார்டை எதிர்பார்க்கலாம் என்று கூறிவிட்டுச் சென்றார். அதன்படி வைல்டு கார்டு போட்டியாளர்களாக யாரேனும் ஒருவர் நிச்சயமாக வருவார் என்ற எதிர்பார்ப்பு இப்போது வரை இருந்து வருகிறது.

    இந்நிலையில் யாஷிகா ஆனந்த் வைல்டுகார்டாக வர வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது பிக்பாஸ் அல்டிமேட்ல் போட்டியாளராக இருக்கும் அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் யாஷிகா இருவருமே நிரூப்பின் எக்ஸ். அபிராமி மற்றும் நிரூப் இருவரும் பிரேக் அப் செய்ததற்குப் பிறகு, நிரூப் யாஷிகா சில ஆண்டுகள் லிவிங் டு கெதரில் இருந்தனர். இந்நிலையில் யாஷிகா ஆனந்த் போட்டியாளராக வருவாரா, போட்டியாளராக சேர்த்தால் நிச்சயமாக ஆட்டம் சூடுபிடிக்கும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி பிக் பாஸ் சீசன் டூவில் மிக கடினமான போட்டியாளராக இருந்தவர் யாஷிகா ஆனந்த். இவரின் விளையாட்டுக்காகவே தனி பரிசாக 5,00,000 ரூபாயை பிக்பாஸ் குழுவினர் அவருக்கு பரிசளித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யாஷிகா ஆனந்த் பிக் பாஸில் கலந்து கொள்வது பற்றி அவரே ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

    விஜய் டிவியில் மீண்டும் பிக் பாஸ் ராஜூ.. அந்த சீரியலில் திரும்பவும் வர போகிறாரா?

    சமீபத்தில் தான் யாஷிகா ஒரு கார் விபத்தில் சிக்கி தனது நெருக்கமான தோழியை இழந்து, இவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று மீண்டார். விபத்து ஏற்படுவதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக இருந்த யாஷிகாவிற்கு பிக்பாஸ் அல்டிமேட் வாய்ப்பு கிடைத்துள்ளதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இவர் இன்ஸ்டாகிராம் லைவில் தனது ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடினார். அப்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் நீங்கள் கலந்து கொள்வீர்களா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பிக் பாஸ் அல்டிமேட்ல் கலந்து கொள்ள தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டார்கள் ஆனால் மறுத்துவிட்டேன் என்றும் கூறியிருந்தார். அதற்கு விளக்கமாக, யாஷிகா 18 வயது இருக்கும் போது பிக் பாஸில் கலந்து கொண்டேன், இப்போது எனக்கு வயதாகி விட்டது மேலும் என்னால் முன்பு போல இப்போது டாஸ்க் செய்ய முடியாது என்று தனது விபத்தில் ஏற்பட்ட காயத்தை காரணமாக குறிப்பிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று உறுதிப்படுத்தினார்.

    இதன் மூலம் பிக்பாஸ் அல்டிமேட்ல் புதிய வைல்டுகார்டு போட்டியாளராக யார் வருவார் என்ற மீண்டும் சமூக வலை தளத்தில் பார்வையாளர்கள் விவாதித்து வருகின்றனர். இதில் மீண்டும் ஓவியா அல்லது ரம்யா பாண்டியன் வரலாம் என்று கூறப்பட்டு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி