விஜய் டிவியின் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி, ஐந்து சீசன்கள் முடிந்து தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 1 ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில நாட்களே ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் அல்டிமேட்டில் சீசன் 1-லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2-விலிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3-ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4-லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5-ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் முதல் சீசனின் இரண்டாவது இடத்தைப் பெற்ற கவிஞர் சினேகன் தற்போது மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளார். கவிஞர் சினேகன் சில மாதங்களுக்கு முன்பு தான்
திருமணம் செய்துக் கொண்டார். பல ஆண்டுகள் காதலித்த நடிகை கன்னிகா ரவியை அவர் திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் நடிகர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்றது. திருமணம் செய்த கொஞ்ச நாட்களிலேயே எதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளீர்கள் என்ற வனிதாவின் கேள்வி பிரச்சனையானது. இந்த வாரம் நடந்த பிரஸ்மீட்டில் கவிஞர் சினேகன் தனது மனைவியை பற்றி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 1 இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நேற்று நடந்தவை இன்று ஒளிபரப்பாகும். ஆனாலும் 24 மணி நேரம் யார் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனாலும் நிகழ்ச்சியை பலரும் முடிந்தவரை தொடர்ந்து பார்த்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் சினேகனின் மனைவி
நடிகை கன்னிகா ரவியும் ஒருவர். அவரும் 24 மணி நேரமும் நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன் என்று அவர் பதிவிட்டிருந்தார்.
'நான் இப்போ படையப்பா ரம்யா கிருஷ்ணன் ஆகிட்டேன். பிக்பாஸ் அல்டிமேட்
நிகழ்ச்சியை நாள் முழுவதும் 24x7 பார்த்து வருகிறேன்' என்று ரொமான்டிக்காக டிவீட் செய்திருந்தார்.
இதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர், நடிகை கன்னிகா ரவி ஒரு போட்டோ ஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்ததை நெட்டிசன்கள் நக்கல் செய்துள்ளனர். கணவனும் மனைவியும் அவ்வப்போது ஒருவரையொருவர் எவ்வளவு ‘மிஸ்’ செய்கிறார்கள் என்பதை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிநேகனும் அவ்வபோது நிகழ்ச்சியில் ‘பாப்பா’ என்று தன் மனைவியை குறிப்பிட்டு, என் மனைவி இதை எல்லாம் செய்வார் என்று பகிர்ந்து, அன்பை வெளிப்படுத்துகிறார்.
எப்படியாவது முதல் முறை தவறவிட்ட கோப்பையை இந்த முறை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தன்னுடைய இருப்பை மிகவும் அழுத்தமாக பதிவு செய்து கொண்டிருக்கிறார் சினேகன் என்றே கூறலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.