Home /News /entertainment /

பிக்பாஸ் அல்டிமேட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்த சாண்டி.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

பிக்பாஸ் அல்டிமேட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்த சாண்டி.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

பிக்பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட்

Bigg Boss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் தீனாவை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் ஒருவரும் நுழைந்து கலக்கி வருகிறார்.

தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சீரியல்களுக்கென்று ஒருபக்கம் ரசிகர் கூட்டம் இருந்தாலும் கூட, ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மனதில் தனி இடம் பிடித்து உள்ளன.

முன்னணி சேனல்களில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகினாலும் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தான் மக்களிடம் அதிகம் பிரபலமாக இருக்கிறது. பிக்பாஸ் ஷோவை பொறுத்தவரை சின்னத்திரையில் வெற்றிகரமாக இதுவரை 5 சீசன்களை நிறைவு செய்து இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த 5 சீசன்களையும் சுவாரசியமாக தொகுத்து வழங்கியதும் இந்த ஷோ வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தது.

also read : சிம்புக்கு மிகவும் பிடித்தமான நபர் வைல்டு கார்டு என்ட்ரி! ரசிகர்கள் ஹாப்பி



சீசன் 5 ஜனவரி மாதம் முடிந்த நிலையில், சில நாட்களிலேயே 'பிக் பாஸ் தமிழ்' நிகழ்ச்சியின் முதல் OTT வெர்ஷனான 'பிக் பாஸ் அல்ட்டிமேட்' கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கியது. பிரபல OTT பிளாட்ஃபார்மாக இருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24*7 லைவ் ஸ்ட்ரீமிங்கில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் அல்ட்டிமேட். வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி பெரியசாமி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 14 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்ட்டிமேட் துவங்கியது.



 

Also read :பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘கதிர்’ பற்றிய தகவல்கள்..

5 சீசன்களையும் டிவி-யில் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் அல்டிமேட் ஷோவையும் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தன்னை சார்ந்த திரைப்பட வேலைகள் ஏராளமாக இருப்பதால் பாதியிலேயே வெளியேறி விட்டார். கமலுக்கு பதில் தற்போது நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கி வருகிறார்.



 

இதுவரை சுரேஷ், சுஜா, அபிநய், ஷாரிக் , தாடிபாலாஜி, சினேகன், அனிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். வனிதா விஜயகுமார் தானாகவே வெளியேறிவிட்டார்.


இதில் சுரேஷ் சக்ரவர்த்தி திடீர் உடல்நல குறைவு காரணமாக போட்டியிலிருந்து விலகி உள்ளார். பிக்பாஸ் அல்டிமேட்டில் ரம்யாபாண்டியன், கலக்க போவது யாரு புகழ் சதீஷ் ஆகியோர் வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நுழைந்து விளையாடி வருகின்றனர். ஷோவில் விறுவிறுப்பு குறைவதால் கலகலப்பாக்க சதீஷை தொடர்ந்து கலாய் மன்னன் KPY தீனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார். முதல்நாளே தனது பாணியில் ஏராளமான பஞ்ச்களை வீசி அனைவரையும் உற்சாகப்படுத்தி உள்ளார் தீனா. இந்நிலையில் தீனாவை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்ற  டான்ஸ் மாஸ்டர் சாண்டி நுழைந்துள்ளார்,

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bigg Boss Tamil, Dance master sandy

அடுத்த செய்தி