Home /News /entertainment /

‘இனிமே இது நம்ம ஷோ’ சிம்புவை பார்த்த போட்டியாளர்களின் ரியாக்‌ஷனை பாத்தீங்களா!

‘இனிமே இது நம்ம ஷோ’ சிம்புவை பார்த்த போட்டியாளர்களின் ரியாக்‌ஷனை பாத்தீங்களா!

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட் ஷோவை இனி கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். சிம்புவை பார்த்த பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் ரியாக்‌ஷன் வீடியோ இணையத்தில் வைரலானது.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் நிறைவை தொடர்ந்து, இளம் தலைமுறையினரை கவர் செய்யும் விதமாக அதிரடி அறிவிப்பு வெளியானது. லாக்டவுன் சமயத்தில் ஓடிடி தளத்திற்கு கிடைத்த வரவேற்பை மனதில் கொண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியை டிஜிட்டல் பரிமாணத்திற்கு மாற்றியது விஜய் டி.வி.

    டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் “பிக்பாஸ் அல்டிமேட்” என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. 24*7 என்ற நேரலை நிகழ்ச்சியாக ‘பிக்பாஸ் அல்டிமேட்’ ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து பார்க்க முடியாதவர்களுக்காக விறுவிறுப்பான காட்சிகளை மட்டுமே கொண்ட பிக்பாஸ் அல்டிமேட் ஷோ தினந்தோறும் இரவு ஒன்பது மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.

    தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். ஓடிடி தளத்திற்கு மாறியுள்ள இந்நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்குவதில் பெருமை அடைவதாகவும் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட 60 நாட்கள் நடக்கும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார்.

    கடந்த பிப்ரவரி 20-ம் தேதி கமல் ஹாசன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல் ஹாசன், அதற்காக ஒதுக்கப்பட்ட தேதிகளை, பிக்பாஸ் அல்டிமேட் ஷூட்டிங்கிற்காக மாற்ற வேண்டியுள்ளதால் இப்படியொரு முடிவெடுத்ததாகவும், பிக்பாஸ் சீசன் 6-ல் சந்திக்கலாம் எனக்கூறி ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.

    இதனைத்தொடர்ந்து கமல் அளவுக்கு ஆளுமையுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ரம்யா கிருஷ்ணன், சரத்குமார், விஜய்சேதுபதி என ஏற்கனவே சின்னத்திரையில் ஸ்பெஷல் ஷோக்களை தொகுத்து வழங்கிய யாரையாவது விஜய் டி.வி. கொண்டு வருவார்கள் என காத்திருந்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் சிம்புவை களமிறங்கியுள்ளது.

    எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்

    இதுதொடர்பான முதல் புரோமோஷன் வீடியோ கடந்த வாரம் வெளியானது. அதில் ஒயிட் கலர் கோட் சூட்டில் செம்ம ஸ்டைலிஷ் ப்ளஸ் ஹேண்ட்ஸம் லுக்கில் வந்து சிம்பு கலக்கினார். “எதிர்பார்கலல்ல... நானே எதிர்பார்க்கல.. பார்க்கலாமா” என்று பேசி எதிர்பார்ப்பைக் கிளப்பி இருந்தார்.



    முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் ஸ்ருதி ஹாசனை விடாத கொரோனா

    இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு தனித்தனியே சிம்புவை அறிமுகப்படுத்திவைத்தார்கள். இனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது சிம்பு தான் என தெரிந்ததும் ஒவ்வொரு போட்டியாளர்களும் என்ன மாதிரி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதையும் காட்டினார்கள். “தலைவா” என கத்தியபடி பாலா டான்ஸ் ஆடியது, அபிராமி ஆனந்த கூச்சலிட்டது, தாமரை, ஜூலி, அனிதா சம்பத் ஆகியோர் ஷாக்கானது என போட்டியாளர்களின் ரியாக்‌ஷன்கள் ரசிகர்களை கவர்ந்தன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil

    அடுத்த செய்தி