ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இன்றைய பிக் பாஸ் எபிசோடில் கமல்ஹாசன் செய்ய போகும் தரமான சம்பவம்!

இன்றைய பிக் பாஸ் எபிசோடில் கமல்ஹாசன் செய்ய போகும் தரமான சம்பவம்!

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6

பெண்கள் விஷயத்தில் அசல் நடந்து கொள்வதை கமல்ஹாசன் கண்டித்து பேச வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிக் பாஸ் 6 இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் தப்பு செய்தவர்களை தட்டி கேட்கணும் என்று கமல் கூறுகிறார்.

    பிக் பாஸ் சீசன் 6 பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. போன வார எபிசோடில் கமல்ஹாசன் குறிப்பிட்ட மாதிரியே முதல் வாரத்திலே இந்த சீசன் போட்டியாளர்கள் கன்டெண்ட் கொடுக்க தயாராகி விட்டனர். மற்ற சீசன்களில் 50 நாட்களுக்கு மேல் தான் போட்டியாளர்கள் வாய்கால் தகராறை தொடங்குவார்கள். ஆனால் இந்த சீசன் போட்டியாளர்கள் அட்வான்ஸாக சென்று முதல் வாரமே சண்டை, அழுகை என டி.ஆர்பி ரேசில் இணைந்து விட்டனர். குறிப்பாக தனலட்சுமி, அசல், அசீம் ஆகியோர் தினமும் ஒருவருடன் முட்டிக் கொள்கிறார்கள்.

    பிக் பாஸ் செல்வதற்கு முன்பு ஜிபி முத்து செய்த காரியம்! வெளியானது வீடியோ

    நேற்றைய எபிசோடில் அசீம் வாடி போடி என பேச, ஆயிஷா செருப்பை கழட்ட பிரச்சனை  பூதாகரமானது. கடைசியில் இருவரும் ஒருவரையொருவர் மன்னிப்பு கேட்டு தங்களுக்குள்ளே முடித்துக்கொண்டனர். ஆனால் கமல் இதை சாதாரணமாக விடமாட்டார் என்பது நன்கு அறிந்ததே. அதிலும் அசீமின் பேச்சு, உடல்மொழி, பாவனை ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இதனால் இந்த முறை கமல்ஹாசன் அறிவுரை அதிகம் அசீம்மை நோக்கி தான் இருக்கும் என தெரிகிறது.

    ' isDesktop="true" id="823363" youtubeid="yI6ohvcqDIw" category="television">

    இந்நிலையில் இன்றைய எபிசோடின் புரமோவில் தப்பு செய்தவர்களை தட்டி கேட்க போகிறேன் என வெளிப்படையாக கூறுகிறார் கமல்ஹாசன். அது கண்டிப்[பாக அசீம், அசல், ஆயிஷா ஆகியோருக்கு தான் இருக்கும் என கெஸ் செய்துள்ளனர் ரசிகர்கள். கமெண்ட் செக்‌ஷனிலும் அசல், அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என தங்களது ஆதங்கத்தை காட்டியுள்ளனர் ரசிகர்கள். அதுமட்டுமில்லை  பெண்கள்  விஷயத்தில் அசல் நடந்து கொள்வதை கமல் கண்டித்து  பேச வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv