ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் : இவரின் சுயரூபம் விஸ்ரூபம் எடுத்தது.. யாரை தாக்குகிறார் கமல்?

பிக் பாஸ் : இவரின் சுயரூபம் விஸ்ரூபம் எடுத்தது.. யாரை தாக்குகிறார் கமல்?

பிக்பாஸ்

பிக்பாஸ்

bigg boss tamil session 5 | இதில் கமல், கைகலப்பு என்று குறிப்பிட்டது கண்டிப்பாக பிரியங்கா - தாமரை பிரச்சனை தான் என்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் 5 சனிக்கிழமை நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. வழக்கம் போல் கமல் சூசகமாக ஹவுஸ் மேட்ஸை தாக்கி பேசுகிறார்.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. பல்வேறு கட்ட டாஸ்க்குகளுக்கு பிறகு தற்போது வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சன் டிவி சீரியல்!

  வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த டான்ஸர் அமீர், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற்று பிக் பாஸ் தமிழ் சீசனில் புது விதையை போட்டுள்ளார். வைலட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தவர், நேரடி இறுதி போட்டியாளராக தேர்வாகி இருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ரசிகர்கள் தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தற்போது எவிக்‌ஷன் லிஸ்டில் பிரியங்கா, ராஜூ, சிபி, நிரூப், பாவனி, தாமரை சஞ்சீவ் ஆகியோர் உள்ளனர். இதில் இந்த வாரம் சஞ்சீவ் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாகவும் ஒரு பக்கம் தகவல் வெளியாகியுள்ளது.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியே போவது யார்? வெளியான தகவல்!

  இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். அந்த வாரம் முழுக்க வீட்டில் நடந்த பஞ்சாயத்துக்களை விசாரிப்பார். அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸை சூசகமாக தாக்கி பேசியுள்ளார்.

  ' isDesktop="true" id="654169" youtubeid="rI7eCkJ7Jhs" category="television">

  அந்த ப்ரோமோவில், “வைலட் கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் இறுதி போட்டிக்கு தேர்வாகி விட்டார். டாஸ்கில் கைகலப்பு வரை போய் விட்டது.சிலரின் சுயரூபம், விஸ்ரூபம் எடுத்துள்ளது “ என குறிப்பிட்டுள்ளார். இதில் கமல், கைகலப்பு என்று குறிப்பிட்டது கண்டிப்பாக பிரியங்கா - தாமரை பிரச்சனை தான் என்கின்றனர் ரசிகர்கள். இதனால் எபிசோடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv