• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பிக்பாஸ் 5 வீட்டில் நடந்த மற்றொரு ரகசியம்... மொத்தமா மறைச்சிட்டாங்களே!

பிக்பாஸ் 5 வீட்டில் நடந்த மற்றொரு ரகசியம்... மொத்தமா மறைச்சிட்டாங்களே!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5ல் இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல நடன இயக்குனர் அமீர் நுழைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

 • Share this:
  பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நடன இயக்குனர் நுழைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இசைவாணி வெளியேறினார். தற்போது ராஜு ஜெயமோகன், பிரியங்கா, அபினய் வாடி, பாவ்னி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 11 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த சீசன்கள் அளவிற்கு விறுவிறுப்பு இல்லை என்ற கருத்து நிலவுவதால், பிக்பாஸே கொளுத்தி போட்டு பிரச்சனையை கவனித்து கொள்கிறார்.

  பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல்... நம்பியவர்களை ஏமாற்றினாரா ரோஷினி?

  அதுமட்டுமில்லை , முதல் வைல்டு கார்டு என்ட்ரியாக சினிமா பையன் அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவரை அனைவரையும் மூளை சலவை செய்து தனது கருத்துக்களை திணித்து வந்தார். மேலும் பிரியங்கா, நிரூபிடம் ஒன்றாகவே அபிஷேக் இருந்தார். பிரியங்கா புகழ் பெற்ற நபர் என்பதால் அவருடன் இருந்தால் தான் தனது முகம் மக்களுக்கு தெரியவரும் என்பதால் தான் அவருடன் இருக்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறி வந்தார். மேலும் என்ன டாஸ்க் நடந்தாலும் அதில் பிரச்னையை ஏற்படுத்தி கொண்டிருந்ததால் அவர்மூலம் நல்ல கண்டென்ட்டுகள் கிடைத்தது. அவரின் வெறியேற்றத்துக்கு பிறகு கன்டெண்ட் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி திணறியது. அதனால் மீண்டும் களத்தில் அபிஷேக் இறக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக நடன இயக்குனர் நுழைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் புரோமோவில், போட்டியாளர்களுக்கு பள்ளிப்பருவ டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் அமீர் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் வைல்டு கார்டு என்ட்ரியாக புதிய நபர் உள்ளே வருவது போன்ற எந்த புரமோவையும் பிக் பாஸ் டீம் வெளியிடவில்லை படு ரகசியமாக இதை வைத்துள்ளனர். ஆனால் புரமோவில் அமீர் நடந்து வந்த காட்சிகள் இடம் பெற ரசிகர்கள் ஈஸியாக கண்டுப்பிடித்து விட்டனர். அமீர் உள்ளே நுழையும் காட்சிகளை இன்றைய எபிசோடில் பார்க்கலாம். அமீர் பற்றி அறிமுகமே தேவையில்லை. இவர் ஊட்டியில் Ads என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். கிங்க்ஸ் ஆஃப் டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 3 குட்டீஸ்களின் டான்ஸ் மாஸ்டர் இவர் தான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: