Home /News /entertainment /

இனி சீரியல்களில் என்னை பார்க்க முடியாது... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை சொன்ன பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ!

இனி சீரியல்களில் என்னை பார்க்க முடியாது... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை சொன்ன பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ!

பிக் பாஸ் ராஜூ

பிக் பாஸ் ராஜூ

எப்போது மீண்டும் ’நாம் இருவர் நமக்கு இருவர் ’சீரியலில். ராஜூ நடிக்க இருக்கிறார் என்ற கேள்விக்கு ரசிகர்களை அதிர்ச்சியடையும் விதமாக பதில் சொல்லியிருக்கிறார் . ராஜூ.

  சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த பிக் பாஸ் 5 வது சீசனில் இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

  பின்னர் அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ்சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவனி ரெட்டியும் பிடித்தனர். பிக்பாஸ் போட்டியின் இறுதிக்கட்டம் முடிந்தவுடன் வெற்றியாளர் அளிக்கும் பேட்டிக்காக காத்திருப்பவர்கள் ஏராளம்.

  இதையும் படிங்க.. விஜய்யின் வில்லன் அல்ல செல்வராகவன் - வெளியான புதிய தகவல்!

  இந்நிலையில் ராஜூ பிக்பாஸ் சீசன் ஃபினாலே முடிந்து ஒரு சில நாட்களுக்கு அமைதியாகவே இருந்துள்ளார். ராஜூ எங்கேயாவது தலை மறைவாகிவிட்டாரோ என்று கேட்கும் அளவுக்கு காணாமல் போயிருந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு தான் . ராஜூ மீடியா சேனல்களுக்கு பேட்டி அளிக்கத் துவங்கினார். அதில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளரான. ராஜூவின் பேட்டி ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது. அதே போல, சமீபத்தில் வெளியான. ராஜூவின் பேட்டியும் அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார், நடிப்புத் திட்டம் பற்றியெல்லாம் கூறியது வைரலாகி உள்ளது.

  இதையும் படிங்க.. பிப். 11 ஆம் தேதி திரைக்கு வரும் சாதி ஆணவ படுகொலை குறித்த திரைப்படம்!

  ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு . ராஜூவுக்கு கிடைத்தது அனைவருக்கும் தெரியும். கதைப்படி, . ராஜூ வெளிநாடு சென்றுவிட்டார் என்று மாற்றப்பட்டது. எப்போது மீண்டும் ’நாம் இருவர் நமக்கு இருவர் ’சீரியலில் ராஜு நடிக்க இருக்கிறார் என்ற கேள்விக்கு ரசிகர்களை அதிர்ச்சியடையும் விதமாக பதில் சொல்லியிருக்கிறார். ராஜூ.

  இனி சீரியலில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவெடுத்துள்ளதாக . ராஜூ தெரிவித்துள்ளார். திரைப்படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், அதனால் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி சீரியலில் இருந்து தான் தன்னுடைய கெரியரை தொடங்கினேன் என்றும், இப்போது அது திரைப்படம் வரை வளர்ந்துள்ளது என்றும். ராஜூ நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

  இதனால் இனி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் . ராஜூ நடிக்கமாட்டார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. . ராஜூவின் கதாபாத்திரம் சவுதி அரேபியாவில் போலீசாரிடம் சிக்கிக்கொண்டு சிறை தண்டனை பெற்று வருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இனி அந்தப் பாத்திரத்திற்கு என்ன ஆகும், . ராஜூவிற்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைப்பார்களா என்பது பற்றி விரைவில் தெரிய வரும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி