ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் 6ல் இந்த வாரம் வெளியேற போகும் சர்ச்சை போட்டியாளர்?

பிக் பாஸ் 6ல் இந்த வாரம் வெளியேற போகும் சர்ச்சை போட்டியாளர்?

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6

பிக் பாஸ் இந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்டில் அசீம், ஆயிஷா, மகேஸ்வரி, அசல் கோலார், தனலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்? என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

  பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி 2 வாரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது வீட்டில் 19 போட்டியாளர்கள் உள்ளனர். ஜி.பி.முத்து, டான்ஸ் மாஸ்டர் சாந்தி ஆகியோர் கடந்த வாரம் வெளியேறினார்கள். இதில் சாந்தி மக்களின் ஓட்டு எண்ணிக்கையில் வெளியேறினார். ஜிபி முத்து தனது மகனுக்காக பாதியிலே கேம்மை விட்டு சென்றார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

  40 வயதில் ஆண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நடிகை!

  அசீம் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகளை பெற்று விட்டார். அவரின் பேச்சு, சண்டை, கோபம், ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களை எரிச்சலடைய  செய்கிறது. அதே நேரம் ரச்சிதா, அமுதவாணன், தனலட்சுமி, விக்ரமன் ஆகியோருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வாரம் தனலட்சுமியிடம் அசீம் நடந்து கொண்ட விதத்துக்கு கமல் கண்டிப்பாக அசீமுக்கு வார்னிங் கொடுப்பார் என தெரிகிறது. அதே சமயம், குறும்படத்திற்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்.

  ' isDesktop="true" id="826972" youtubeid="IwG0hJerA_Q" category="television">

  போன வாரமே அசீமுக்குரெட் கார்டு வார்னிங் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் அதை உணரவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்டில் அசீம், ஆயிஷா, மகேஸ்வரி, அசல் கோலார், தனலட்சுமி ஆகியோர் உள்ளனர். இதில் அசல் கோலார் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை பெண்கள் விஷயத்தில் அசல் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் தான் இந்த வாரம் அசல் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv