நாடக கலைஞரான தாமரை பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். தனது வெகுளித்தனமான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி புரிதல் இல்லாத தாமரை, நாளடைவில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களே டாஃப்பான போட்டியாளர் என்ற சொல்லும் வகையில் விளையாடினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளாரான கமல்ஹாசனும் சில எபிசோட்களில் தாமரையை பாராட்டியுள்ளார். எந்த ஒரு பாப்புலாரிட்டியும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் மட்டுமே ரசிகர்கள் சம்பாதித்து இறுதி கட்டத்தை நெருங்கியவர் தாமரை. இவர் வெற்றிப்பெற வேண்டும் என்று பலரும் விருப்பினர். ஆனால் ராஜு தான் அந்த சீசனின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் அல்டிமேட்டிலும் இறுதி கட்டம் வரையும் சென்று மக்களின் ஆதரவை பெற்றார். தற்போது பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது கணவருடன் பங்கேற்று வருகிறார். தாமரை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.இவருக்கு இன்ஸ்டாகிராமில் 56,000 பின்தொடர்பாளர்கள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் சுடிதார் மற்றும் புடவை மட்டுமே அணிந்து வந்த தாமரை, தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சிக்காக விதவிதமான காஸ்டியூமில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
இந்த வீடியோ, இதுவரை 3 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் பிக்பாஸில் சக போட்டியாளரான ஐக்கி பெர்ரி இந்த வீடியோவிற்கு ‘வாவ்’ என்று கமெண்ட்டும் செய்துள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.