பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 68ம் நாளான நேற்று தேர்தல் பிரச்சார டாஸ்க் நிறைவடைந்தது. வீட்டில் உள்ள NPP மற்றும் BBMK காட்சிகள் இணைந்து NPMK என்கிற புதிய கட்சியாக உதயமானது. அதனை தொடர்ந்து, அனைவரும் சென்று ரகசியமான வகையில் வாக்களித்தனர். ராஜு - சஞ்சீவ் கட்சி கூட்டணி சேர்ந்ததால் அவர்கள் அணி 7 வாக்குகள் மற்றும் பிரியங்கா அணி 5 வாக்குகள் பெற்றது. அதில் ஜெயித்ததால் இமான் அண்ணாச்சி தலைவர் ஆனார்.
இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்பட்ட டாஸ்க் மூலம் வீட்டில் பல பெரிய சண்டைகள் நிகழ்ந்ததையும் கண்டோம். அதில் மிக சென்சிட்டிவாக பார்க்கப்பட்ட சண்டை தான் அபிநய் மற்றும் பாவனி விவகாரம். இந்த வார டாஸ்கில் இருவரின் பேரும் மீண்டும் மீண்டும் அடிபட்டது. இறுதியாக, நடந்த ஒரு டாஸ்கில் கூட ராஜு மற்றும் பிரியங்கா இடையே நடந்த வாக்குவாதத்தில் அபிநய் - பாவனி உறவு பற்றி பேச்சு வந்தது.
இதனால், மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளான பாவனி, நேற்று சமாதானமாகி ராஜு மற்றும் சிபியிடம் பேசிவிட்டார்.
இந்த நிலையில், 69ம் நாளான இன்று வெளியான ப்ரோமோவில் இந்த விவகாரம் குறித்து பேசிய கமல்ஹாசன், "இது என் தனிப்பட்ட விவகாரம் என்று ஒரு நபர் பிரகடனப்படுத்திய பிறகு, அதில் தலையிடுவது, அதைப்பற்றி பொதுவெளியில் விவாதிப்பதோ வரம்புக்கு உட்பட்டதா? வரம்பு மீறியதா? எது வரம்பு? விவாதிப்போம் வீட்டிற்குள்ளேயும், நாமும்." என்று பேசியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரோமோவில் பிரியங்கா மற்றும் தாமரை சண்டை குறித்து கமல்ஹாசன் பேசுகிறார். அப்போது தாமரை கோபத்தில் பேசிய வார்த்தைகளை நகைச்சுவை கலந்து பேசினார். கமல் கூறியதாவது, "மூக்கறுத்து ஊறுகாய் போட்ருவேன் என்று நீங்கள் சொன்னீர்கள். அப்படினா?.. மூக்க அறுத்துவிட்டால், மூக்கு இல்லாம நா எப்படி மூச்சு விடுவேன். அப்புறம் அதில் ஊறுகாய் என்றால் அதை சாப்பிட்டால் நல்ல இருக்குமா? என்று யோசித்தேன் என நகைச்சுவையாக கேட்கிறார். உடனே, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சிரித்தபடி கைதட்டுகின்றனர்.
பின்னர் தாமரையிடம் பேசத் தொடங்கிய கமல், இப்போ பிரியங்கா மீது உங்களுக்கு கோபம் இருக்கிறது. அவர் உங்களை பார்த்து நாடகம் ஆடறீங்க என்று சொன்னதற்கு, நான் நாடகக்காரி என்பதால் அப்படி சொல்கிறாயா? என்று பிரியங்காவிடம் கேட்டீர்கள். மேலும் அதற்கு வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வரும் தனது வசனத்தை மிகவும் நகைச்சுவையாக பேசினார். உடனே அதற்கு பதிலளித்த தாமரை " இல்லை சார் அவர்கள் சொன்ன விதம் தான் எங்கு கவலையாக இருக்கிறது" என்கிறார். உடனே, பிரியங்கா மெல்லிய சிரிப்புடன் தாமரையை பார்க்கிறார். மீண்டும் தாமரையிடம் பேசிய கமல், " என்னை நாடகம் என்று சொல்கிறாயா? என்று கேட்பதற்கு பதிலாக, ரொம்ப நன்றி. உனக்கு வருமா நாடகம் என்று அவர்களை பார்த்து கேட்டிருக்க வேண்டும்" என்று தாமரைக்கு அறிவுரை வழங்கினார். அதோடு ப்ரோமோ முடிவடைகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5, Vijay tv