Home /News /entertainment /

பிக் பாஸ் தாமரை உண்மையில் எப்படிப்பட்டவர்? அவரின் கணவர் கூறும் உண்மைகள்!

பிக் பாஸ் தாமரை உண்மையில் எப்படிப்பட்டவர்? அவரின் கணவர் கூறும் உண்மைகள்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

அந்த வீடியோவில் தாமரையின் கணவர் மற்றும் அவரின் மாமியார் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர்

  பிக்பாஸ் 5 சீசனில் கலக்கி கொண்டிருக்கும் நாட்டுபுற கலைஞர் தாமரை செல்வி குறித்து அவரின் கணவர் மற்றும் மாமியார் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை முகம் தெரியாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மதுமிதா, ஸ்ருதி போன்ற மாடல்களுடன் நாடக கலைஞரான தாமரைச் செல்வியும் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கை, பேச்சு, குணாதிசயத்தை கண்டு இவர் 2 வாரத்தில் கிளம்பி விடுவார் என கணித்தவர்களின் எண்ணத்தை பொய்யாக்கிவிட்டு 82 நாட்களை தாண்டி தற்போது பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் தாமரை.

  இவருக்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகியுள்ளது. இவர் பிக் பாஸ்ட் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற குரல்கள் இணையத்தில் ஒலிக்க தொடங்கியுள்ளன. வெகுளித்தனமான பேச்சு, பாசம், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற குணம், டாஸ்க் என்று வந்ததும் இறங்கி ஆடுவது என ஆண் போட்டியாளர்களையே பின்னுக்கு தள்ளி விளையாடி கொண்டிருக்கிறார் தாமரை.

  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே வந்து அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு செல்கின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் தாமரை செல்வியின் கணவர் மற்றும் இரண்டாவது மகன் உள்ளே வந்தனர். அதிலும் தாமரையின் கணவரின் பேச்சு, அவர் தாமரைக்கு அட்வைஸ் செயத விதம், மற்ற பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நன்றி சொன்ன விதம் என ஒரே நாளில் தாமரையை காட்டிலும் அவர் ரசிகர்கள் மனதில் நின்று விட்டார். இந்நிலையில் தாமரையின் கணவர் மற்றும் அவரின் மாமியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு 2 மாதத்திற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

  இதையும் படிங்க.. அடி மேல் அடி வாங்கும் விஜய் டிவி சீரியல்கள்.. தொடர்ந்து டி.ஆர்.பியில் சன் டிவி முதலிடம்!

  அந்த வீடியோவில் தாமரையின் கணவர் மற்றும் அவரின் மாமியார் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். தாமரையின் மாமியார் பேசுகையில் “தாமரை என் மருமகள் இல்லை மகள் போல் தான். என்னை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கும் அப்படி தான். எங்களை பார்த்து அனைவரும் பொறாமை படுவார்கள். தாமரையின் குணம் தங்கம் போல். கோபப்படுவாள் ஆனால் பாசக்காரி. சண்டை போட்டால் கூட உடனே மறந்துவிடுவாள் . வெகுளிதனமானவள். குடும்ப வறுமைக்காக தான் இப்படி இரவு பகல் பாராமல் மாடு மாதிரி உழைக்கிறாள். பிக் பாஸ் வீட்டில் அவள் இத்தனை நாள் இருப்பது பெருமையாக இருக்கிறது” என்றார்.

  இதையும் படிங்க. 1 கோடி கொடுத்தாங்க.. நீ பார்த்த? ரசிகர்களால் கடுப்பான சர்வைவர் விஜயலட்சுமி! ஏன்?

  தாமரையின் கணவர் , “தாமரையின் உண்மையான குணமே இதுதான் . அவர் நடிக்கவில்லை. கோபத்தில் கத்துவார் சண்டை போடுவார். அப்புறம் தேம்பி தேம்பி அழுவார். பாசம் வைத்து விட்டால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். ஒரு பெண் நாடக கலைஞராக அவரும் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். ஆனால் என்ன நடந்தாலும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லி விடுவார். எங்களுக்காக தான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். குடும்ப வறுமை, கடன் பிரச்சனைகளை சரி செய்ய இவ்வளவு நாள் போராடி உள்ளே விளையாடி வருகிறார்” என கூறியுள்ளார். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி