ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கமல் கேமராவுக்காக நடிக்கிறார்... சிம்பு மீது மரியாதை கூடியது - தாடி பாலாஜி மனைவி நித்யா

கமல் கேமராவுக்காக நடிக்கிறார்... சிம்பு மீது மரியாதை கூடியது - தாடி பாலாஜி மனைவி நித்யா

தாடி பாலாஜி - நித்யா

தாடி பாலாஜி - நித்யா

தன் கட்சியில் இருக்கும் பெண்ணின் பிரச்சனையையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை. அவரா மக்கள் பிரச்சனையை தீர்க்கப்போகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நடிகர் கமல் ஹாசன் கேமராவுக்காக நடிப்பதாகவும், அவர் முதலமைச்சராகி என்ன செய்வார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவரும், தாடி பாலாஜி மனைவியுமான நித்யா.

  தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. அவரது மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். கடந்த சில வருடமாகவே தாடி பாலாஜி குடும்பம் பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. ஆகையால் அவரும் அவரது மனைவி நித்யாவும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

  இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என அலைந்ததால், பாலாஜி குடும்ப பிரசனை மீது ஊடக வெளிச்சம் பட்டது. இதற்கிடையே தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அந்நிகழ்ச்சியின் இறுதியில் நித்யா - பாலாஜி இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாகவும் தான் வாழ்ந்து வருகின்றனர்.

  Beast 3rd Single: பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியீடு!

  இதற்கிடையே தன் மனைவியிடம் இருக்கும் மகளை மீட்டுத்தரக்கோரி சமீபத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகாரளித்திருந்தார். இந்நிலையில் பிரபல இணையதளம் ஒன்றின் பேட்டியில் மகள் போஷிகாவுடன் கலந்துக் கொண்ட நித்யா, “பிக் பாஸ் முடிந்ததும் கமல் ஒரு மது விருந்து வைத்தார். அப்போது கமல் முன் நல்லவர் போல பாலாஜி நடித்தார். ஆகையால் கமலிடம் இந்த பிரச்சனை குறித்து நான் பேச முற்பட்டேன். எல்லாரும் நினைப்பதைப்போல கமல் சாரை நானும் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக முதலில் நினைத்தேன். அதனால் தான் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இணைந்து உழைத்தேன். அப்போதும் அவர் என்னிடம் என்ன பிரச்சனை என்பதை கேட்கவில்லை. அவர் கேமராவுக்காக நடிக்கிறார்.

  ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்... விழாவை சிறப்பித்த 80'ஸ் பிரபலங்கள்!

  தன் கட்சியில் இருக்கும் பெண்ணின் பிரச்சனையையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை. அவரா மக்கள் பிரச்சனையை தீர்க்கப்போகிறார். மக்கள் நீதி மையம் பேருக்கு மட்டும் தான், ஆனால் மக்களுக்கு எந்த நீதியும் இல்லை. அவரை சந்திக்க 4 முறை அனுமதி கேட்டும் தரவில்லை. இவ்வளவு பிரச்னை நடந்ததே, நான் எப்படி இருக்கிறேன், போஷிகா எப்படி இருக்கிறாள் என்பதைக் கூட அவர் அறிந்துக் கொள்ளவில்லை. இன்னும் பேசினால், நிறைய கண்டெண்ட் கொடுத்து விடுவேன் என்பதால், அவர் குறித்த பேச்சை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

  கணவரை பிரிந்ததும் காதலில் கவனம் செலுத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

  மீடியாவில் இருந்து எனக்கு சிம்பு மட்டும் தான் என்ன பிரச்சனை என்பதை எனக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்து விசாரித்தார். சிம்புவை திரையில் வேறு மாதிரி தான் பார்த்து இருப்போம். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் தங்கமான மனிதர். நான் சிம்பு பேசிய போது யாரோ மிமிக்ரி பேசுகிறார்கள் என்று நினைத்து கட் பண்ணிவிட்டேன். பின் அவர் என்னை வீடியோகாலில் அழைத்து பேசினார். என்ன பிரச்னை என 1 மணிநேரம் என்னிடம் பேசினார். அப்போது அவர் மீதான மரியாதை 1000 மடங்கு அதிகரித்தது. இன்னும் அவரை நேரில் சந்தித்ததில்லை, ஒருவேளை சந்தித்தால் அவரின் அந்த அக்கறைக்கு நன்றி சொல்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil