Home /News /entertainment /

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகும் சமந்தா.. தீயாய் பரவும் தகவல்!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகும் சமந்தா.. தீயாய் பரவும் தகவல்!

சமந்தா பிக் பாஸ்

சமந்தா பிக் பாஸ்

இதற்கு முன்பு சமந்தா தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

     நடிகை சமந்தா பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை அவரிடம் நடந்துக் கொண்டிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. ரசிகர்களால் ’சம்மு’ என செல்லமாக அழைக்கப்படும் சமந்தா இப்போது சினிமா கெரியரில் பயங்கர பிஸி. அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் தமிழில் வெளியான ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் அவருக்கு ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது. கட்டிஜா ரோலில் இளைஞர்களின் கனவு கன்னியாக படம் முழுக்க வலம் வந்தார். படத்தின் கதைப்படி நயன் மற்றும் சமந்தா இருவருக்கும் சரிசமமான கேரக்டர். ஆனாலும் சமந்தா படத்தில் தனது எக்ஸ்பிரஷன்களால் அதிகம் ஸ்கோர் செய்து விட்டார்.

    ‘நாயகன் மீண்டும் வர்றார்!’ – கமல் ஹாசனின் நடிப்பில் நாம் கொண்டாடிய ஆக்ஷன் படங்கள்!

    இவருக்கும் நாகசைதன்யாவுக்கும் விவாகரத்து ஆன பின்னர், பலரும் சமந்தா யோகா, மெடிடேஷன் பக்கம் போய் விடுவார். படங்களில் கவனம் செலுத்த மாட்டார் என்றனர். ஆனால் விவாகரத்துக்கு பின்பு இன்னும் போல்டான ரோல்களை தேர்வு செய்து சமந்தா நடித்து வருகிறார். அதற்கு சின்ன புரமோ தான் புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய நடனம். வெறும் ஒரு பாட்டுக்கு ஆடினால் மார்க்கெட் டவுன் ஆகிவுடும் என நினைக்காமல் ’ஊ சொல்றீயா’ பாட்டுக்கு கவர்ச்சி நடனர் ஆடினார். அதன் பின்பு சமந்தா சென்சேஷனல் க்ரஷ் ஆகிவிட்டார்.



    ஒருபக்கம் சினிமா, பெர்சனல் லைஃப் என சமந்தா பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் தனக்கென தனி நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வார். அவ்வப்போது லைவிலும் ரசிகர்களுடன் உரையாடுவார். சமந்தா நடிப்பில் யசோதா திடைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஆனால் அதற்கு முன்பு சின்னத்திரையில் சமந்தா என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    Vikram : வெளியானது விக்ரம்..! கமல் ஹாசன் ரசிகர்கள் கொண்டாட்டம்

    அதாவது, தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ளது. கடந்த 3 சீசன்களாக பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா தான் ஆங்கரிங் செய்து வந்தார். ஆனால் தற்போது அவர் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருவதால் இந்த முறை பிக் பாஸ் சீசன் 6 ஷோவை ஆங்கரிங் செய்ய முடியாது என தெரிவித்து உள்ளாராம். அதனால் இந்த முறை சமந்தாவை  ஆங்கராக களம் இறக்க பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளதாக, இதுக் குறித்து சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு சமந்தா தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actress Samantha, Bigg Boss Tamil, Tollywood

    அடுத்த செய்தி