Home /News /entertainment /

பிக் பாஸ் : பிரியங்காவின் தவறை நேரடியாக சுட்டிக்காட்டும் கமல்!

பிக் பாஸ் : பிரியங்காவின் தவறை நேரடியாக சுட்டிக்காட்டும் கமல்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பஸில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இந்தவாரம் அபிநய் வெளியேறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 11வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை, நமீதா மாரிமுத்து , நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, அபிநய் வாடி, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 11 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் ராஜு, பிரியங்கா, அபிநய், பாவ்னி, வருண், அக்‌ஷரா ஆகியோர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இந்தவாரம் அபிநய் வெளியேறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    பிரியங்காவை பற்றி அக்‌ஷராவிடம் கேட்கும் கமல்ஹாசன்.. பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கு!

    இந்நிலையில் இன்று அக்ஷ்ரா - பிரியங்கா இடையே உள்ள பிரச்சனை குறித்து கமல் விவாதிப்பது இன்று வெளியான ப்ரோமோக்களில் உறுதியாகியுள்ளது. இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், அக்ஷ்ராவிடம் கேள்வி எழுப்பும் கமல், இன்னும் 4 வாரங்களே இருக்கிறது, பிரியங்கா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கிறார்.

    பிரியாங்காவை பொறுத்தவரையில் நமக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்பது போல இருக்கிறார் என கூறுகிறார் அக்‌ஷரா. இதனை தொடர்ந்து இந்தவார போட்டியில் மட்டுமா? என கமல் கேட்க, இல்லை ஆரம்பத்தில் இருந்தே அவர் இப்படித்தான் என அக்ஷ்ரா கூறும் காட்சிகள் உள்ளது.



    இதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், கண்ணாடி பிம்பம் டாஸ்கில் இருந்தே உங்களிடம் நான் மாற்றத்தை காண்பதாக கமல் கூறுகிறார். இப்போது அக்ஷ்ரா கூறும் குற்றச்சாட்டை இதற்கு முன்னர் வேறு யாரவது உங்களை கூறி இருக்கிறாரா? என கேள்வி எழுப்புகிறார். இதனை கேட்டு பிரியங்கா தன்னை மாற்றிக்கொள்வதாக கூறும் காட்சிகள் உள்ளது.

    பிக்பாஸ் அமீரின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? சிறுவனாக இருந்தபோதே கொலை செய்யப்பட்ட தாய்!

    இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் ராஜு - அக்ஷ்ரா இடையே மோதல் ஏற்பட்டது இதுகுறித்து இன்று கமல் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி