ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்... ராஜூ செயலால் செம்ம கடுப்பில் அக்‌ஷரா!

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்... ராஜூ செயலால் செம்ம கடுப்பில் அக்‌ஷரா!

பிக் பாஸ் டாஸ்க்

பிக் பாஸ் டாஸ்க்

பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் பிரியங்கா, ராஜூ, வருண், அக்‌ஷரா, தாமரை, அமீர், சஞ்சீவ், பாவனி, அபினய் ஆகியோருக்கு இன்று மூன்றாவது டாஸ்கை பிக் பாஸ் தருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டாஸ்க் வாரம்.. மொத்த ஹவுஸ்மேட்ஸூம் டாஸ்கில் ஜெயிக்க நீ, நான் என போட்டி போட்டுக் கொண்டு விட்டுக் கொடுக்காமல் ஆடி வருகின்றனர். இன்றைய டாஸ்கின் முதல் புரமோவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜூவும் அக்‌ஷராவும் முட்டிக் கொள்கின்றனர்.

  பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்ட ரேஸில் சென்று கொண்டிருக்கிறது. இறுதி போட்டிக்கு செல்ல யார் தகுதிவாய்ந்தவர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் டாஸ்க்குகளை பிக் பாஸ் தந்து கொண்டிருக்கிறார். இந்த வாரத்தின் முதல் நாளே இதுக் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிக் பாஸ். இந்த வார நாமினேஷன் பட்டியலுக்கு வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த லிஸ்டில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இந்த வாரம் முழுக்க வித விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

  முதல் நாள் திங்கட்கிழமை நடந்த வரிசைப்படுத்து டாஸ்கில் சிபி ஜெயித்தார். இதனால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்தார். அடுத்து நேற்று நடந்த பஸ் டாஸ்கில் விடாபிடியாக நின்று நிரூப் ஜெயித்தார். அவரின் பெயரும் நாமினேஷன் பட்டியலில் இருந்து விலகியது. தற்போது லிஸ்டில் இருக்கும் பிரியங்கா, ராஜூ, வருண், அக்‌ஷரா, தாமரை, அமீர், சஞ்சீவ், பாவனி, அபினய்ஆகியோருக்கு இன்று மூன்றாவது டாஸ்கை பிக் பாஸ் தருகிறார்.

  இதற்கான புரமோ தான் தற்போது வெளியாகியது. தாய கட்டையில் ஹவுஸ்மேட்ஸின் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். 3 பஸ்ஸர் அடித்த பின்பு அதில் யாருடைய முகம் மேலே இருக்கிறதோ அவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார் என பிக் பாஸ் சொல்ல, உடனே ராஜூ, முகம் தெரிந்தால் தானே என்று, தாயக் கட்டை மீது ஏறி அமர்ந்து கொள்கிறார்.

  ' isDesktop="true" id="639975" youtubeid="pptu3HJeGrU" category="television">

  இதனால் அக்‌ஷராவுக்கு கோபம் வருகிறது. :நான் எப்படி விளையாட?” என்று, அவர் ராஜூவிடம் கேட்க, உடனே ராஜூ ”நீ விளையாட வேண்டாம் சும்மா இரு” என நக்கலாக சொல்ல, உடனே அக்‌ஷரா கோபித்து கொள்கிறார்.. டாஸ்க்குன்னு வந்துட்டா ஹவுஸ்மேட்ஸ் பயங்கரமாக மாறிவிடுவார்கள் என்பது இதுவரை பிக் பாஸ் ஹவுஸில் நடைப்பெற்ற பல டாஸ்குகள் நமக்கு உணர்த்தி இருக்கிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Bigg boss timing, Vijay tv