Home /News /entertainment /

BIGG BOSS : ஜாக்பாட் அடித்தது.. ரு. 15 லட்சத்துடன் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியது இவரா?

BIGG BOSS : ஜாக்பாட் அடித்தது.. ரு. 15 லட்சத்துடன் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியது இவரா?

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் 5ல் விட்ட வாய்ப்பை பிக் பாஸ் அல்டிமேட்டில் தக்க வைத்துக் கொண்டார் ஸ்ருதி பெரியசாமி.

    பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரூ. 15 லட்சத்தை எடுத்துக் கொண்டு முக்கிய போட்டியாளர் வெளியே சென்று இருக்கிறார்

    இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஃபினாலே வாரம். யார் அந்த வெற்றியாளர்? என்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். தற்போது வீட்டில் தாமரை செல்வி, ஸ்ருதி, ஜூலி, நிரூப், ரம்யா பாண்டியன் , அபிராமி , பாலாஜி முருகதாஸ் ஆகியோர் உள்ளனர். இதில் இந்த வார, டபுள் எவி்க்‌ஷன் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இறுதி போட்டிக்கு 4 பேர் செல்வார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பிக் பாஸ் அல்டிமேட்டில் கேஷ் ஆஃபர் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. ரூ. 3 லட்சம் முதல் இதன் மதிப்பு தொடங்கியது. கடைசியில் ரூ. 15 லட்சம் வரை சென்று, அந்த 15 லட்சத்தை எடுத்துக் கொண்டு போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளார். அவர் வேற யாருமில்லை ஸ்ருதி தான்.

    அஸ்வின் – லாஸ்லியாவுக்காக சிம்பு செய்த செயல்.. யூடியூப்பில் இப்ப இதுதான் வைரல்!

    பிக் பாஸ் 5ல் கலந்துக் கொண்ட ஸ்ருதி 4வது வாரத்திலே போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் மீது ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் தாமரை செல்வி காயின் பறிக்கப்பட்ட விவகாரத்தில் ஸ்ருதி சில நெகடிவ் கமெண்டுகளை பெற அதனால் பிக் பாஸ் வீட்டில் அவரால் இருக்க முடியாமல் போனது. ஆனால் பிக் பாஸ் 5ல் விட்ட வாய்ப்பை பிக் பாஸ் அல்டிமேட்டில் தக்க வைத்துக் கொண்டார்.



    ஆரம்பம் முதலே போட்டிகளில் கடுமையாக விளையாடி டஃப் போட்டியாளராக இருந்த ஸ்ருதி பெரியசாமி தற்போது ரூ. 15 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை ஸ்ருதியின் இந்த சூப்பர் முடிவுக்கு அவரின் ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ரூ. 15 லட்சம் ஸ்ருதிக்கு ஈஸியாக வழங்கப்படவில்லை.

    நான் உன்னை வெறுக்கிறேன்.. பிக் பாஸ் வருணை பற்றி அக்‌ஷரா வெளியிட்ட வீடியோ!

    ரூ. 15 லட்சம் பணத்திற்காக ஸ்ருதியும், ஜூலியும் போட்டி போட்டனர். முதல் டாஸ்கில் உடம் பலத்தை காட்டி ஸ்ருதி வென்றார், இரண்டாவது டாஸ்கில் லக் அவர் பக்கம் நிற்க, டாஸ்கில் வெற்றி பெற்றார். கடைசியில் ஸ்ருதி ரூ. 15 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி