பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து உடல்நிலை காரணமாக சுரேஷ் சக்கரவர்த்தி போட்டியில் இருந்து பாதியிலே வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கும் நேரத்தில் 2வது போட்டியாளர் அவராகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல விமர்சனங்கள் இருந்தாலும்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த ரசிகர்களை நம்பி தான் பிக் பாஸ் சீசன் 5 முடிவதற்கு முன்பே பிக் பாஸ் அல்டிமேட் குறித்த தகவல்கள் அறிவிக்கப்பட்டன.இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.
பரபரப்பான திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.. முல்லைக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது!
இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. சரியாக 3 வாரங்களுக்கு பிறகு பல காரணங்களால் கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். மீண்டும் பிக் பாஸ் 6சீசனில் சந்திப்போம் என்றார். அவருக்கு பதில் நடிகர் சிம்பு தொகுப்பாளராக உள்ளே வந்தார். ஆனால் சிம்புவின் இண்ட்ரோவுக்கு முன்பே வனிதா விஜயகுமார் வலுக்கட்டாயமாக வெளியே போகிறேன் என அடம்பிடித்து நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
அவரின் வெளியேற்றத்துக்கு பிறகு நிகழ்ச்சி அதே பரபரப்புடன் சென்று கொண்டிருந்தது. சிம்புவின் முதல் அறிமுக நிகழ்ச்சியில்
வைல்டு கார்டு என்ட்ரியாக விஜய் டிவி சதீஷ் மற்றும் சுரேஷ் தாத்தா உள்ளே வந்தனர். சுரேஷ் தாத்தா தான் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து முதன் முறையாக ஓட்டு எண்ணிக்கையை வைத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர். ஆனாலும் அவருக்கு பிக் பாஸ் மறுவாய்ப்பு வழங்கி வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பினார்.
அந்த தகவலை நம்ப வேண்டாம்.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பற்றி பரவிய வதந்தி!
2வது வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக கேமை விளையாடி வந்தார். அவருடைய வயசுக்கு இளம் போட்டியாளர்களுடன் டஃப் கொடுத்து ஆடினார். இவருக்கும் அனிதாவுக்கும் வழக்கம் போல் சண்டைக்கு மேல் சண்டை வந்து கொண்டிருந்தது. சென்ற வாரம் அனிதா எவிக்ட் செய்யப்பட்டார்.
இப்படி இருக்கையில் இன்றைய நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் தாத்தா பாதியில் வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுக் குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவர்கள் அறிவுருத்தலால் தான் சுரேஷ் தாத்தா வெளியேறினார் என கூறப்படுகிறது. அதே சமயம் இதுக் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.