Home /News /entertainment /

சிம்பு வரும் முதல் நாளே இப்படியா? பிக் பாஸ் அல்டிமேட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக விஜய் டிவி பிரபலம்!

சிம்பு வரும் முதல் நாளே இப்படியா? பிக் பாஸ் அல்டிமேட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக விஜய் டிவி பிரபலம்!

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

Bigg Boss tamil ultimate : இன்று சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று முதல் சிம்புவை பார்க்கலாம்

  பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு புது தொகுப்பாளராக நடிகர் சிம்பு எண்ட்ரி கொடுக்கும் அதே நாளில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே இருக்கிறது. இதை இளைஞர்கள் தான் விரும்பி பார்க்கிறார்கள் என்பது இல்லை. கன்டெண்டை தரமாக கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டு மொத்த குடும்பத்தினரும் பார்க்க தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் இடம் பெறும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம். இதில் ஒளிப்பரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் பலருக்கும் பிடிக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி, கடந்த 5 வருடமாக வெற்றிகரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் டெலிகாஸ்ட் செய்து வருகிறது.

  இதையும் படிங்க.. சீரியலுக்கு வருவதற்கு முன்பு நான் செய்த வேலை இதுதான்… ஷாக் கொடுத்த கோகுலத்தில் சீதை வசு!

  இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இருப்பதால் மக்கள் இந்த வகை நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கின்றனர். இதனால் மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காட்டிலும் பிக் பாஸ் ஷோவின் டி.ஆர்.பி எப்போதும் அதிகமாகவே இருக்கும்.கடந்த மாதம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த நிலையில்,'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.

  இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.இதில் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்களும் அதிரடியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருத்தருக்கு ஒருவர் சண்டைகள் போடுவதில் பெரிய ஆட்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய மிக சில நாட்களிலேயே ஏராளமான சண்டைகள் அவர்களுக்குள் தொடங்கியது. அதே போன்று பல சர்ச்சைகளும் உருவானது.

  இதையும் படிங்க..தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!

  அதே போல் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரமே எலிமினேஷனும் தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 24 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை சுரேஷ் தாத்தா, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் ஆகியோர் வெளியேறியுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் தானாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியே போவதாக கூறி பாதியிலே கிளம்பினார். வனிதாவின் வெளியேற்றதற்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் நேரமின்மை காரணமாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்க போவதில்லை என கூறி ரசிகர்களுக்கு ஷாக் தந்தார். அவர் கூறிய அடுத்த நாளே வனிதாவும் சென்றார். கமலுக்கு பதில் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என கேள்விகள் எழுந்த போது, ரம்யா கிருஷ்ணன் பெயர் அடிப்பட்டது. கடைசியில் நடிகர் சிம்பு தான் இனி பிக் பாஸ் அல்டிமேட் தொகுப்பாளர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது. இதையும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.

  கலக்க போவது யரு சதீஷ்


  இன்று சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று முதல் சிம்புவை பார்க்கலாம். அவர் எப்படி போட்டியாளர்களை கையாள போகிறார், எப்படி பேசுவார் என்பதை பார்க்க ஒரு பக்கம் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த , மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, இன்றைய ஷோவில் பிக் பாஸ் அல்டிமேட் வைல்டு கார்டு என்ட்ரி விஜய் டிவி கலக்க போவது யாரு புகழ், சதீஷ் உள்ளே போக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதுவரை ஒளிப்பரப்பான பிக் பாஸ் 5 சீசனிலும் சதீஷ் கலந்து கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் பிக் பாஸ் அல்டிமேட்டில் சதீஷ் எண்ட்ரி கொடுக்க போவதாக வெளியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா இல்லையா என்பது இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தெரிந்து விடும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Simbu, Vijay tv

  அடுத்த செய்தி