Home /News /entertainment /

பிரியங்காவை கோர்த்துவிட நினைத்து ராஜூவிடம் பல்பு வாங்கிய நிரூப்!

பிரியங்காவை கோர்த்துவிட நினைத்து ராஜூவிடம் பல்பு வாங்கிய நிரூப்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே ரேஸில் சிபி, அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூவரும் உள்ளனர்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் பரபரப்பாக நடந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5, தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இறுதி கட்ட போட்டியில், ராஜூ ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

    டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கடுமையான போட்டியாளராக நிரூப் இருப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் டிக்கெட் டு ஃபினாலேவின் முதல் போட்டியில் யார் இந்த டிக்கெட்டை பெற தகுதியானவர்கள் இல்லை என்பதை முடிவு செய்ய வேண்டும் என போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அனைவரும் நிரூப்பை வெளியேற்றினார்கள். இதனால் ரேசில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

    அதற்கு அடுத்ததாக, முட்டை உடைக்கும் போட்டியில், தாமரை மற்றும் பாவனி இருவரும் வெளியேறினர். நேற்றைய டாஸ்க்கில், பிரியங்கா மற்றும் ராஜூ வெளியேறினார்கள். தற்போது, டிக்கெட் டு ஃபினாலே ரேஸில் சிபி, அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூவரும் உள்ளனர். இதில் சஞ்சீவ் மற்றும் அமீர் இருவருமே வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க.. நடிகையின் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பு - ஓட்டம் பிடித்த முதியவர்கள்!

    இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் TTF போட்டியில் இருந்து வெளியேறிய ஒவ்வொரு போட்டியாளருக்கும் கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விக்கு வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும், கேள்வி கேட்கப்பட்ட TTF ரேசில் இருக்கும் போட்டியாளர்களும் ஒரே மாதிரியான பதில் அளித்தால், அவர்கள் ஒரு படி முன்னேறலாம். விரைவாக சரியான பதில்களை சொல்லி, எல்லைக் கோட்டைத் தொடும் இரண்டு போட்டியாளர்கள் அடுத்த இறுதி கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.



    தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், இந்த டாஸ்கில் பேசும் நிரூப், அண்ணாச்சி இருக்கும் போது இந்த நிகழ்ச்சி கலக்க போவது யாரு என்பது போல இருக்காது என பிரியங்கா பேசினார். ஆனால் கடந்த வாரத்தில் ராஜூவுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகமாக ஜாலியாக இருக்கிறார் என கூறுகிறார். இதற்கு பதில் அளிக்குமாறு அமீரிடம் பிக் பாஸ் கூறுகிறார். அதற்கு அமீர், இல்லை என்கிறார். மேலும் இந்த கேள்விக்கு நிரூப்பை தவிர அனைவருமே இல்லை என கூறி இருப்பது ப்ரோமோவில் தெரிகிறது. இதனால் ராஜூ, கொஞ்ச நாளில் எல்லாம் சரி ஆகிவிடும் தம்பி என கலாய்க்கும் காட்சிகள் உள்ளது.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சன் டிவி சீரியல்!

    முன்னதாக வெளியான இரண்டாவது புரோமோவில், அபிநய் பிரச்சனை குறித்து பாவ்னி பேசுகிறார். அதைத்தொடர்ந்து பிரியங்காவும், பாவனியின் மேல் அமீர் கொண்ட அன்பு ஒரு ஸ்ட்ரேட்டஜி தானா? என்ற கேள்வியை கேட்டுள்ளார். மேலும் இந்த டாஸ்கில் சஞ்சீவ் மற்றும் சிபி முன்னேறும் நிலையில் யார் இன்று வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி